பக்கம்:கலைக்களஞ்சியம் 3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கபாடி வன் வணிக மாதான விசாகையையும் விரும்பித் தீமை செய்ய முயன்றபோது, ககந்தன் அறிந்து, தன் மக்களே எனினும் அவர்களைக் கொன்றான். இவனாற் காக்கப் பெற்ற புகார் நகரம் காகந்தி எனப் பெயர் பெற்றது (மணிமேகலை, காதை 22). கங்கபாடி தென்னிந்தியாவில் இக்கால மைசூர் இராச்சியத்தின் தென்பாகத்திலிருந்த பண்டைய நாடு. வடக்கே மரந்தலை (Marandale) நாடும், கிழக்கே தொண்டை நாடும், மேற்கே கடலும், தெற்கே கொங்கு நாடும் இதன் எல்லைகளாக இருந்தன. இந்நாட்டைக் கி.பி. 4 முதல் 10ஆம் நூற்றாண்டு வரையில் கங்க மரபினர் ஆண்டு வந்தனர். பார்க்க : கங்கர். இது கங்கம் என்றும் வழங்கப்பெறும். மைசூரின் தென் பகுதி ; இதனை மொழி வகையாற் பிரிக்கப் பெற்ற பதினெட்டு நிலங்களில் ஒன்று என்று நன்னூல் உரையிலே (272) மயிலைநாதர் கூறுகிறார். கங்கபாடி 10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழராட்சிக்குட்பட்டது; முடி கொண்ட சோழ மண்டலம் என்ற மாகாணமாயிற்று. கங்கர் எட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் ஆண்ட அரச வமிசங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். இவர்களில் மேலைக்கங்கர், கீழைக்கங்கர் என இரு பிரிவினருளர். மேலைக்கங்கர் : மேலைக்கங்கராட்சியைத் தெற்கு மைசூரில் நிறுவியவன் காண்வாயன கோத்திரத்தில், ஜான்னேய கங்கை நதியுடன் தொடர்புள்ள குலத்தில் தோன்றிய கொங்கணிவர்மன் (சு. கி. பி. 400) ஆவான். நாட்டின் பெயர்கங்கபாடி (பார்க்க : கங்கபாடி) கங்கரின் இலச்சினை யானை. தலைநகரம் தொடக்கத்தில் குவளால புரம் (கோலார்), பிற்பாடு தலைக்காடு. அடுத்து அரச ரானவர்கள் முறையே 1-ம் மாதவன் (சு. கி.பி. 425 450), அரிவர்மன் அல்லது ஜயவர்மன் (சு. கி. பி. 450-470), கிருஷ்ணவர்மன் என்னும் II - ம் மாதவன் (சு. 470-530), அவநீதன் (சு. 530-600) என்போர். ஏழாவது நூற்றாண்டு வரை பல்லவப் பேரரசின் பாதுகாப்பிலிருந்து வந்த கங்கர் பிறகு சாளுக்கியரின் பாதுகாப்புக்கு உள்ளானார்கள். துர்விநீதன் (சு. 600 655) ஆட்சியில் தெற்கில் கோயம்புத்தூர் வரையிலும், கிழக்கில் அனந்தப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்கள் வரையிலும் நாட்டின் எல்லை விரிவடைந்தது. அவன் சாளுக்கிய மன்னன் புலிகேசிக்குத் தன் மகளை மணம் செய்வித்துப் பல போர்களில் அவனுக்குத் துணைவனாக நின்றான். இந்த நட்பு முஷ்கரன் (சு. 655-660), ஸ்ரீ விக்கிரமன் (சு. 660-665), பூவிக்கிரமன் (சு. 665-679), சிவமாரன் (679-725) ஆகியவர்களின் காலங்களிலும் நிலைத்திருந்தது. பூவிக்கிரமன் பல்லவ பரமேசுவர னுடன் போர்புரிந்து உக்கிரோதயம் என்ற பல்லவரின் மணியாரத்தைக் கைப்பற்றிக்கொண்டான். சாளுக்கிய மன்னன் 11-ம் விக்கிரமாதித்தனும், பிறகு அவன் மகன் கீர்த்திவர்மனும் காஞ்சியில் நுழைந்து, பல்லவர்களை வென்ற போர்களில் கங்க அரசன் ஸ்ரீ புருஷன் (சு. 725-778) அவர்களுக்கு உதவியதுடன் பெருமானடி கள்' என்ற பல்லவ விருதாவளியையும் தனதாக்கிக் கொண்டான். ஆனால் பாண்டிய அரசன் இராசசிம்மன் கங்கபாடியின் தென் எல்லையிலுள்ள கொங்கு நாட்டைப் பிடித்துக்கொண்டான். சாளுக்கியரின் உதவியுடன் ஸ்ரீ புருஷன் பாண்டியருடன் வெண்பையில் போர் புரிந்து தோல்வியடைந்தான். ஆயினும் தன் மகளைப் பாண்டிய இளங்கோவுக்கு மணம் செய்வித்துச் சமா தானம் செய்து கொண்டான். கங்கர் சாளுக்கிய நாட்டை ராஷ்டிரகூடர்கள் கைப்பற்றிக் கொண்ட பிறகு அவர்களின் மன்னன் 1-ம் கிருஷ்ணன் 768-ல் ஸ்ரீபுருஷனை வென்றான். நந்திவர்மன் எனும் பல்லவ மல்லனும் விளந்தையில் நடந்த போரில் ஸ்ரீ புருஷனை வென்று உக்கிரோதய ஆரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அவனுக்குப்பின் அரசனான அவன் மகன் II-ம் சிவ மாரன் (778-817) தனக்குப் போட்டியாக இராச்சியத் தைக் கைப்பற்ற முயன்ற தன் தம்பியை ராஷ்டிரகூட II-ம் கோவிந்தன் உதவியால் வென்றான். ஆனால் கோவிந்தன் தம்பி துருவன் நாட்டாசையால் சிவமாரனை வென்று சிறையிலிட்டான். சிவமாரன் நீண்டகாலச் சிறை வாழ்விற்குப்பின் II-ம் கோவிந்தனால் விடுதலை செய்யப்பட்டு, எஞ்சிய தன் வாழ்நாட்களில் ராஷ்டிர கூடப் பேரரசுக்குப் பணிந்து வந்தான். ஒன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கங்கநாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கோலாரில் 1-ம் பிருதிவீ பதியும் தலைக்காட்டில் இராசமல்லனும் (817-837) ஆண்டார்கள். நுளம்பர்களும் வாணர்களும் கங்கநாட் டின் சில பாகங்களைக் கைப்பற்றிக்கொண்டார்கள். இரணவிக்கிரமன் என்ற 1-ம் நீதிமார்க்கன் (837-870) நுளம் பருடன் சேர்ந்து கொண்டு ராஷ்டிரகூடரை எதிர்த்ததில் தோல்வியுற்று ராஷ்டிரகூடப் பேரரசுக்கு அடிபணிந்தான். அவன் தன் புதல்வன் பூதுகனுக்கு ராஷ்டிரகூட மன்னன் அமோகவர்ஷன் மகள் அப்பலப் பையை மணம் செய்வித்தான். அடுத்து அரசர்களான II - ம் இராசமல்லனும் (870-907) 11-ம் நீதிமார்க்க னும் (907-935) ராஷ்டிரகூடரின் பாதுகாப்பிலிருந்து வந் தார்கள்; நுளம்பருடன் அடிக்கடி சண்டையிட்டார்கள். ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ மன் னன் |-ம் ஆதித்தன் என்பவன் பாண்டிய வரகுணனை வென்ற திருப்புறம்பியம் (ஸ்ரீ புறம்பியம்) போரில் கோலார் கங்க மன்னன் பிருதிவீபதி என் போன் சோழ ருக்கு உதவியாகச் சண்டையிட்டதில் உயிர்நீத்தான். அவன் பேரன் ஹஸ்திமல்லன் பிருதிவீபதிக்குச் சோழ மன்னன் வாணர் நாட்டின் ஆட்சியையும் 'வாணாதி அர சன்' என்ற விருதாவளியையும் அளித்தான். தலைக்காட்டுக் கங்கர்கள் சோழருக்குப் பகைவரான ராஷ்டிரகூடரின் துணைவராகவே யிருந்துவந்தார்கள். III-ம் இராசமல்லனுக்கு (935-938) பின்வந்த பூதுகன் (938-960) III - ம் (ராஷ்டிரகூட மன்னன்) கிருஷ்ண னுக்கு உதவியாகச் சோழருடன் தக்கோலத்தில் புரிந்த போரில் சோழ இளங்கோ இராசாதித்தனைக் கொன்றான். இவ் வுதவிக்குக் கைம்மாறாக ராஷ்டிரகூட மன்னன் பனவாசி, பெல்வோலா முதலிய நாடுகளைப் பூதுகனுக்குக் கொடுத் தான். அடுத்த அரசன் II -ம் மாரசிம்மன் (961-975) காலத்தில் சாளுக்கியப் பேரரசு முடிவடைந்து, கல்யா ணிச் சாளுக்கிய வமிசம் என்ற புது வமிசம் தோன்றியது. மாரசிம்மனுக்குப்பின் IV-ம் இராசமல்லனும் (975 984) அவனுக்குப்பின் இராக்கசன் என்பவனும் கங்க அரசர்களாயினர்.

சோழமன்னன் |- ம் இராசராசன் கொங்கு நாட்டைக் கவர்ந்து கொண்டு, காவிரியாற்றைக் கடந்து, தடிகைபாடி யைக் கைப்பற்றித் தலைக்காட்டையும் பிடித்தான். 10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கங்கபாடி முழுவதும் சோழப்பேரரசில் இணைக்கப்பட்டு, முடி கொண்ட சோழமண்டலம் என்ற மாகாணமாக மாறிவிட்டது. கங்க அரச வமிசமும் முடிவடைந்தது. ஆனாலும் மேலும் சில நூற்றாண்டுகள் வரையில் இங்குமங்கும் கங்க வமி சத்தினர் சிலர் சோழ, பாண்டிய, போசல இராச்சியங் களில் சிறு பகுதிகளுக்கு அதிகாரிகளாக இருந்து வந்தார்