பக்கம்:கலைக்களஞ்சியம் 3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கள்

கள். இவர்களில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலத்தவனான சீயகங்கன் (த.க.) குறிப்பிடத்தக்கவன்.

கங்க அரசர்கள் நீதி வழுவாதவர்கள். கற்றறிந்த பண்புடையோர். வடமொழி, பிராகிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்கள். எல்லா சமயங்களையும் வேறுபாடின்றி ஆதரித்தவர்கள். அவர் களில் பலர் சமண மதத்தைச் சேர்ந்தவர்கள். சிம்ம நந்தி, விஜயகீர்த்தி, பூஜ்யபாதர், அரிட்டநேமி , அசித சேனர் முதலிய பெரியார்கள் அரச குடும்பத்தினரின் குருக்களாகப் போற்றப்பட்டார்கள். சிரவணபெள் குளத்தின் குன்றுகளிலுள்ள சில கோயில்கள் சாமுண்ட ராயனால் கட்டப்பட்டவை. 60 அடி உயரமுள்ள கோமடேசுவரர் சிலையும் அவனாலேயே நிறுவப் பட்டது.

கீழைக்கங்கர் தென் மைசூரை ஆண்டுவந்த மேலைக் கங்க வமிசத்தைச் சேர்ந்த காமார்ணவ தேவன் என்ற இளங்கோ கி. பி. 8ஆம் நூற்றாண்டின் இறுதியில் கலிங் கத்துக்குச் சென்று, அங்கு மகேந்திரகிரியைச் சார்ந்த பகுதியைக் கவர்ந்து ஆட்சி செலுத்தினான். அவன் வமி சத்தினர் கீழைக்கங்கர் எனப்படுவர். 11ஆம் நூற்றாண்டு வரையில் அரசாண்ட கீழைக்கங்கரைப் பற்றிய குறிப்புக்கள் அதிகம் கிடைக்கவில்லை. கீழைக்கங்கர் பெரும்பாலும் முதலில் சாளுக்கியர்களுக்கும் பின்னர் ராஷ்டிரகூடர்களுக்கும் பணிந்தே அரசு செலுத்தி வந்தார்கள்.

சோழ மன்னன் |-ம் இராசேந்திரனது வெற்றிப் படை கங்கைக்கரை வரை செல்லுங்கால் கீழைக்கங்க அரசன் மதுகாமார்ணவன் (ஆ. கா. 1019-1038) தோல்வியுற்றதனாற் கலிங்கம் சோழப் பேரரசுக்குப் பணிந்தது. அடுத்த அரசன் வக்கிரஹஸ்தன் (1038 1068) சாளுக்கியர்களுக்கு உதவியளித்த காரணத்தால் சோழ இளங்கோ வீரராசேந்திரன் கலிங்கத்தின் மேல் படையெடுத்து, அதை மீண்டும் சோழப் பேரரசுக்கு அடிபணிய வைத்தான். வக்கிரஹஸ்தனுடைய மகன் இராசராச கங்கன் (1068-1078) முதல் குலோத்துங்கச் சோழன் மகள் இராச சுந்தரியை மணந்தான். இவர் களின் மகன் அனந்தவர்மன் சோழ கங்கன் 71 ஆண்டு கள் (1078-1148) பெருஞ் சிறப்போடு அரசு செலுத் தினான். அனந்தவர்மன் சோழருக்குக் கப்பம் கட்டத் தவறியதால் சோழரின் பகைமை மூண்டு , வேங்கி நாட் டில் அரசப் பிரதிநிதியாக இருந்த இளங்கோ விக்கிரம சோழனாலும் 1110ல் மறுபடியும் சோழத் தளபதி கருணாகரத் தொண்டைமானாலும் தோற்கடிக்கப்பட் டான். ஆனால் வங்காள சேனவமிசத்து அரசர்களுடன் நடந்த போர்களில் அனந்தவர்மன் வெற்றி பெற்றான்.

பின்னர் ஆண்ட அரசர்கள் முஸ்லிம் படையெடுப்பு களைத் தடுப்பதில் ஈடுபட்டனர். கீழைக்கங்கரின் ஆட்சி வீழ்ச்சியுறத் தொடங்கியது. IV-ம் பானுதேவன் ஆண்டபோது அவன் அமைச்சன் கபிலேந்திரன் அர சைக் கைப்பற்றி (1343) கஜபதி வமிசம் என்ற புது வமிசத்தை நிறுவினான். இதனுடன் கங்கர் ஆட்சி முற்றுப்பெற்றது.

கீழைக்கங்கரின் தலைநகரம் கலிங்க நகரம் (முகலிங் கம்). அவர்கள் இலச்சினை எருது. கலிங்க அரசர்களின் கோயில் திருப்பணிகள் மிகவும் உயர்ந்தவை. அவர் களால் கட்டப்பட்ட கோயில்களைப் புவனேசுவரம், பூரி (ஜகந்நாதர் கோயில்), கொனாரக், முகலிங்கம் முத லிய ஊர்களில் காணலாம். புவனேசுவரம், பூரி, கொனா ரக்கிலுள்ள கோயில்கள் ஓரியா நாட்டுச் சிற்பக்கலையின் உன்னத நிலைக்கு எடுத்துக் காட்டுக்களாகும். இவை இந் தியக் கலைச் செல்வங்களில் புகழ் பெற்றவை. கூ. ரா. வே.

கங்கை கங்கன் சேரன் படைத்தலைவரில் ஒருவன். பெரும் பூண் சென்னியின் படைத் தலைவனான பழையன் என் பவனாற் கழுமலத்தில் கொல்லப்பட்டவன் (அகம். 44). கங்காரு : பார்க்க : காங்கரு. கங்குல் வெள்ளத்தார் சங்கப் புலவர்களில் ஒருவர். இராப்பொழுதைக் கண்டஞ்சிய தலைவி, கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே' எனக் கூறுவ தாக நயம்படக் கூறியிருத்தல் பற்றி இப்பெயர் பெற்றார் (குறுந். 387).

கங்கை இந்தியாவின் பெரிய ஆறு. உலகப் பெரிய ஆறுகளுள் ஒன்று ; சமயத் தொடர்புடையது; இந்துக் களால் புனித ஆறாகப் போற்றப்படுவது. நீளம் 1,557 மைல். தென் இமயமலையில் கங்கோத்திரி என்னும் இடத்துக்குக் கடல் மட்டத்திலிருந்து 13,800 அடி உய ரத்துக்கு மேலுள்ள பனிக்குகையில் பாகீரதி ஆறு தோன்றுகிறது. அவ்வாற்றுடன் ஜான்ஹவி, அளக நந்தா என்ற ஆறுகள் சேர்ந்து கங்கையாறாகின்றது. இது சுகி என்ற இடத்தில், இமயமலையைத் துளைத்துக்கொண்டு தென்மேற்கில் திரும்பி ஹரித்துவாரம் என்ற இடத்தை அடைகிறது. அங்கிருந்து உத்தரப்பிரதேசத்தில் சிறிது தூரம் தெற்காக ஓடிப் பின் தென்கிழக்காகத் திரும்பி, பருக்காபாத் (Farukhabad) மாவட்டத்தின் கிழக்குப் பகுதி வழியாக ஓடுகிறது. பரூக்காபாத் மாவட்டத்தில் கங்கையோடு ராமகங்கா ஆறு கலக்கிறது. பிரயாகை யில் (அலகாபாத்தில்) யமுனை என்ற பேராறு கங்கை யோடு கலக்கிறது. அங்கிருந்து உத்தரப் பிரதேசத்தில் கிழக்காகப் பாய்ந்தோடி, வழியில் கோமதி ஆறும் காக்ரா ஆறும் கலக்கப்பெற்றுக் காசிநகரைக் கடந்து, வேறுபல சிற்றாறுகளையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு, வங்காளத்தின் எல்லையில் சேர்ந்து, ராஜமகால் குன்று களைத் தொட்டுக்கொண்டு, தெற்காகத் திரும்பி, கௌர் என்ற சிதைந்த நகரத்திற்கு 20 மைலுக்கு அப்பால் கிளைகளாகப் பிரிந்து கழிமுகமாக அமைகிறது. இக்கழி முகம் வங்காள விரிகுடாவிலிருந்து 300 ஆம் மைலில் தொடங்குகிறது. பத்மா எனப்படும் தலையாய கிளை யானது தென்கிழக்குத் திசையில் ஓடி, கோலந்தாவில் பிரமபுத்திரா நதியுடன் கலந்து, பின் மேக்னா (Meghna) என்ற அகன்ற கழிமுகத்தை அமைத்துவிட்டு, நவகாளி என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. மேக்னா கழிமுகம் கிழக்குக் கோடியில் உள்ளது. அதற்கு மேற்கே மற்றும் பல கழிமுகங்கள் உள்ளன. மேற்குக் கோடியில் இருப் பது ஹூக்ளிக் கழிமுகம். இதில் தான் கடலிலிருந்து 80 மைல் தொலைவில் கல்கத்தா நகரம் உள்ளது. ஹூக் ளிக் கிளையாறே போக்குவரத்திற்கு முக்கியமான நீர் வழி. கடலிலிருந்து 1,300 மைல் தூரம் வரை கங்கையில் நடுத்தரக் கப்பல்களும், கல்கத்தாவரை கடலில் செல் லும் பெரிய நீராவிக் கப்பல்களும் செல்லுகின்றன. கங்கையாற்றின் நீர் பாயும் நிலத்தின் பரப்பு 4,32, 480 ச . மைல். பார்க்க : கங்கைச் சமவெளி. *

புராண வரலாறு : இந்தியாவில் ஆங்காங்குள்ள ஆறுகள் தெய்வத் தன்மை கொண்டனவாகப் போற்றப் படுகின்றன. அவற்றுள் கங்கைக்கு மட்டும் தனித்த தோர் பெருமை பண்டைக்காலந் தொட்டே இருந்து வருகிறது. கங்கை பாரத நாடு முழுதுமே போற்றப் படும் மாந்தியாகும். இந்து மதத்திற்கு ஓர் உயிர் நாடி போல் ஓடிக்கொண்டிருப்பது கங்கை. மானிடரின் பாவங்கள் அனைத்தையும் கழுவி, அவர்களுக்குத் தூய் மையையும், பேரறிவையும், வீட்டையும் அளிக்கவல்ல தென்று நூல்களாற் கூறப்பெறும் இந்த நதி இந்திய நதிகள் எல்லாவற்றிற்குமே பிரதிநிதியாக விளங்கு