பக்கம்:கலைக்களஞ்சியம் 3.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கை

கிறது. மற்ற இடங்களில் உள்ள பல நதிகளுக்கும் புனல்களுக்கும் உபசாரமாகக் கங்கையின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லா மங்கள ஸ்நானத் திற்கும் 'கங்கா ஸ்நானம்' என்ற புனிதப் பெயரே வழங்கி வருகிறது. இந்துக்கள் குடிக்கும் நீர் எதுவாயி னும் அதை கங்காமிருதம் என்றே சொல்லுவர். வாழ்க் கையின் கடைசிக் காலத்தில் கங்கைக்குப் போகவேண் டும் ; அதன் கரையில் காலத்தை நல்ல நினைவுடன் போக்க வேண்டும் என்று வைதிக இந்துக்கள் எண்ணுவர்.

கங்கைக்குத் தேவநதி என்றும், ஆகாச கங்கை என் றும் பெயர். கங்கை முதலில் விண்ணுலகிலேயே இருந்து, பின்னால் பூவுலகில் இறங்கிப் பின் கீழே பாதா ளத்திற்குச் சென்றதால் இதற்கு 'த்ரி - பத-கா' (மூன்று வழிகளில் செல்பவள்) என்ற பெயர் ஏற்பட்டது. வானிலிருந்து கங்கை கீழே வந்த கதை இதிகாச புரா ணங்களில் இரண்டு வகையாகக் காணப்படுகிறது. மிக வும் நன்றாய்த் தெரிந்த கதை வால்மீகி இராமாயணத்தில் பாலகாண்டத்தில் இராம லட்சுமணர்களுக்கு விசுவா மித்திரர் சொல்லும் கதைகளுக்கிடையே காணப்படுவ தாகும். கங்கை இமயமலையின் மகளாய்த் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி வானிலே தங்கி வந்தாள். அயோத்தியை ஆண்ட சகர மகாராஜன் வேள்வியைத் தொடங்குவதற்கு முன் இந்திரன் வேள்விக் குதிரை யைத் திருடிக்கொண்டு போய்ப் பாதாளத்தில் தவமிருக் கும் கபில முனிவரின் அருகில் கட்டி ஒளித்துவிட் டான். சகரனுடைய 60,000 பிள்ளைகளும் குதிரை யைத் தேடிக்கொண்டு, பூமியைத் தோண்டிப் பாதாளத் திற்குச் சென்றனர் ; பாதாளத்தில் கபில முனிவருக்கு அருகே தந்தையின் வேள்விக் குதிரையைக் கண்டதும் அவர்கள் கபிலரே குதிரையின் திருடர் என்றெண்ணி, அவரைத் தாக்குவதற்கு ஓடி வந்தனர். கபிலர் தம் தவத் தீயால் அவர்கள் அனைவரையும் சாம்பலாக்கினார். சகரன் தன் மூத்த மனைவியின் மைந்தன் அசமஞ்சன் மகனான அஞ்சுமானை அனுப்பிக் குதிரையையும் காணாமற்போன மக்களையும் தேடச் செய்தான். அஞ்சுமான் பாதாளம் சென்று, குதிரையைக் கண்டு, அங்கே நடந்த சம்பவத் தையும், கங்கை நீரைக் கொண்டு வந்து சாம்பல் குவி யலை நனைத்தால் எரிந்து போன சகர புத்திரர்களின் ஆன்மா கடைத்தேறும் என்ற செய்தியையும் சுபர்ணன் என்ற தெய்வப் பறவையிடமிருந்து அறிந்தான். குதி ரையைக் கொண்டு சகரன் வேள்வியை நிறைவேற்றிக் கொண்டான். சகரனுக்குப் பிறகு அரசனான அஞ்சு மான் எவ்வளவோ பாடுபட்டும் கங்கையை வானி லிருந்து கீழே கொண்டுவர முடியவில்லை. பின் திலீபன் அரசனானான். அவனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவனுக்குப் பிள்ளையாய்த் தோன்றிய பகீரதன் தன் தவத்தால் பிரமதேவனையும், சிவபிரானையும், கங்கை யையும் திருப்தி செய்து, கங்கையை இறக்கித் தன் முன்னோர்கள் கடைத்தேறும்படி செய்தான். பகீரதன் பூலோகத்திற்குக் கொண்டு வந்ததால் கங்கைக்கு 'பாகீரதி' என்று பெயர் ஏற்பட்டது. இதனால் பெரிய காரி யங்களைச் சாதிக்க மேற்கொள்ளும் பெரு முயற்சிக்கு 'பகீரதப் பிரயத்தனம் ' என்ற பெயர் ஏற்பட்டது.

பிரமன் வரம் கொடுத்ததும் வானிலிருந்து விழும் கங்கைப் பெருக்கின் வேகத்தைத் தாங்கச் சிவபெருமான் ஒருவரே ஆற்றலுள்ளவர் என்று அவரைக் குறித்து பகீரதன் தவங்கிடந்து, கீழே விழும் கங்கையைத் தாங்கும்படி அவரை வேண்டிக்கொண்டான். இப்படி கங்கையைத் தலையில் தாங்கியதால் சிவபிரானுக்கு 'கங்காதரன்' என்ற பெயர் ஏற்பட்டது.

கங்கை பற்றது 'சிவன் என்னைத் தாங்குவதா? அவனையும் இழுத் துக்கொண்டு பாதாளம் செல்வேன்' என்று இறுமாப் புக்கொண்டு, கங்கை மிக வேகமாகச் சிவபிரான் தலை யில் விழ, அவள் செருக்கை அடக்கச் சிவபிரான் அவளைத் தம் சடையின் ஒரு பகுதியில் அடக்கிக் கொண்டார். பல்லாண்டுகள் கங்கை சிவபிரான் தலையிலே கட்டுண்டு சுழன்று கொண்டிருந்தாள். மறு படியும் பகீரதன் தவங்கிடந்து சிவபிரானை வேண்ட, அவர் தம் தலையிலிருந்து 7 அருவிகளாகக் கங்கைப் பிர வாகத்தை விடுத்தார். இந்த 7 அருவிகளாவன : கிழக்கு முகமாய் விழுந்தோடியவை மூன்று : ஹ்லாதினீ, பாவனீ, நளினீ . மேற்கே பாய்ந்தவை மூன்று : ஸுச க்ஷஸ், சீதா, சிந்து. ஏழாவது பகீரதனைப் பின் தொடர்ந்து, தென்புறமாக வந்த கங்கா-பாகீரதி. வரும் வழியில் கட்டிற்கடங்காத கங்காதேவி மறுபடி யும் வேள்வி நடத்திக் கொண்டிருந்த ஜன்ஹு முனி வரின் வேள்விக் கூடத்தினுட் பாய, அவர் கங்கையைக் காதில் அடக்கிக்கொண்டார்; பின்னும் பகீரதன் வேண்ட, காது வழியே விட்டார். ஜன்ஹு விட்டதால் கங்கைக்கு ஜான்ஹவி' (ஜன்ஹு மகள்) என்ற பெயர் ஏற்பட்டது. ஜன்ஹு ஆச்சிரமம் சுல்தான்கஞ்சு என்ற இடத்தில் இருக்கிறது. பாகவதம் 10, 70, 44-ல் உள்ளவாறு வானில் ஓடும் நிலையில் இந்நதி மந்தாகினி என்றும், பூமியில் கங்கை என்றும், பாதாளத்தில் போக வதி என்றும் பெயர்பெற்றது.

பாகவதத்திலே திரிவிக்கிரமாவதாரத்தில் உல களந்த பெருமானது வானளாவிய திருவடியைப் பிரம தேவன் தன் கமண்டல நீரால் அலம்பியபோது, பெரு கியவளே ஆகாச கங்கை ; ஆன துபற்றி கங்கைக்கு 'விஷ்ணுபதி' என்றும் பெயர் வழங்குகிறது. இதே புராணத்தில் மற்றோரிடத்தில் கங்கை விண்ணுலகில் இருந்ததும், பூவுலகிற்கு வந்ததும், பின் வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது : திரிவிக்கிரமாவதாரத்தில் பெருமானுடைய கால் நகம் குத்திப் பிரமாண்டம் பொத்தலாகிப் போனபோது அதிலிருந்த நீர் ஒழுகித் துருவமண்டலத்தில் விழுந்து, அங்கிருந்து, வானில் வழிந்தோடி, மேருவில் விழுந்து, பிரமலோகம் அடைந்து, அங்கிருந்து சீதா , அளகநந்தா, வங்க்ஷ, பத்திரா என்று நாற்றிசையிலும் நான்கு அருவிகளாகப் பெருகிக் கடைசியில் கடலை அடைந்தது. இவற்றுள் அளகநந்தையே பரதகண்டத்தினுள் பாய்ந்த ஆறாகும். கங்கை கீழே இறங்கியதாகக் கூறப்படும் நாள் வைகாசி, சுக்கில பட்ச , திருதியை செவ்வாய்க் கிழமை, அத்தநட்சத்திரம்.

கங்கை பாயுமிடம் யாவராலும் தூயதாகக் கருதப் பட்டபடியால் கங்கைக் கரையில் பண்டைக்காலங்களில் முனிவர்களின் ஆச்சிரமங்களும் தவமிருக்கும் இடங் களும் இருந்தன. அவை இக்காலத்தில் கங்கைக்கரையில் திருப்பதிகளாகவும், தீர்த்தங்களாகவும் கருதப்படுகின் றன. இதன் கரையில் தங்கிச் சித்த புருஷர்கள் பரம பதத்தை அடைவதாகக் கூறுவதால் இதற்குச் சித்த நதி என்றும் பெயர். இப்படி கங்கையை ஒட்டி ஏற்பட்ட தலங்கள் ஏராளமாயிருப்பினும், அவற்றுள் மிகச் சிறந் தவை கங்கை உற்பத்தியாகும் இடமான கங்கோத்திரி யும், கங்கை தென்படும் இடமான கங்காத்துவாரம் என்ற ஹரித்துவாரமும், பிரயாகையும், காசியும் ஆகும். கங்கையில் விழும் ஆறுகள் எல்லாவற்றின் சங்கமங்களை யும் விட, கங்கையும் யமுனையும் சேரும் இடமான பிரயாகையை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுகிறார் கள். இப்படியே கங்கை கடலில் கலக்குமிடமும் புனித மாக எண்ணப்படுகிறது.