பக்கம்:கலைக்களஞ்சியம் 3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கோத்திரி : இது கர்வால் பிரதேசத்தில் ருத்திர ஹிமாலயம் என்ற பள்ளத்தாக்கில் இருக்கிறது. இப்பள் ளம் முழுதும் நிரம்பிக் கிடக்கும் பனிக்கட்டியிலிருந்து கங்கை உற்பத்தியாகிறது. இங்கே கங்காதேவியின் கோயில் ஒன்று இருக்கிறது. கங்காத்துவாரம் (ஹரித்துவாரம்) : இதற்கு மாயா புளி என்றும் பெயர். இந்தியாவின் ஏழு முக்கியத் தலங் களுள் ஒன்றாகிய மாயா என்பது இவ்விடமே. கங்கை தோன்றும் இடம் என்று காளிதாசன் சொல்லும் கன கலம் என்பதும் இதன் பக்கமே. ஹரித்துவாரத்திலுள்ள தீர்த்தத்திற்குப் பிரமகுண்டம் என்று பெயர். தட்சன் வேள்வி நடத்தியபோது சதி தன் உடலை நீத்த இடமும் இதுவென்று கூறுவர். பிரயாகை : இது கங்கை, யமுனை, கண்ணுக்குப் புல னாகாமல் ஓடுவதாகக் கருதப்படும் சரசுவதி இம்மூன் றும் கூடுமிடம். சரசுவதி பூமியினுள் துழைந்து மறைந்து போய்ப் பிரயாகையில் கங்கை யமுனை கூடு மிடத்தில் வந்து வெளிப்படுவதாகக் கூறுவர். மூன்றின் சங்கமமாதலால் இதற்குத் திரிவேணி என்றும் பெயர். இதன் அருகில் அலகாபாத் என்ற நகரம் உள்ளது. இங்கே ஆண்டுதோறும் மாகம் (மாசி) என்னும் மாதத் தில் மாகமேளம் என்னும் புனிதமான பெரு நீராட்டு விழா நடைபெறும். 12 ஆண்டுகளுக் கொருமுறை கும்பமேளா என்னும் பெருவிழா நடைபெறுகிறது. இதில் இலட்சக் கணக்கான இந்துக்கள் கலந்து கொள்வர். காசி : கங்கையைச் சார்ந்த திருப்பதிகளில் காசியே முதன்மை பெற்றது. மற்றும் இது பாரதநாட்டின் கணக்கற்ற திருப்பதிகளிலும் தலை சிறந்தது. இதற்கு அவிமுக்த கேத்திரம், ஆநந்தவனம், பெருமயானம் என் றும் பெயர். இங்கே வந்து வாசித்தாலே நற்கதியடைய லாம் ; இங்கே உடலை நீத்தலே முத்திக்கு வழியாகும்; சிவபிரான் இங்கே தெருத்தெருவாக அலைந்துகொண்டு மடியும் மக்கள் காதில் தாரக மந்திரத்தை உபதேசித்துக் கொண்டிருக்கிறார் என்பர். கங்கையைப் பற்றிப் புராணக் கதைகள் பல வருகின் றன. அவற்றுள் முக்கியமாகச் சொல்லவேண்டிய சம் பவங்கள் இரண்டு : கங்கை பீஷ்மரை ஈன்றெடுத்தது; முருகக்கடவுளுக்குத் தாயாக விளங்கியது. இதனால் இரு வருக்கும் காங்கேயர் என்ற பெயர் ஏற்பட்டது. கங்கையில் நீராடுவது, அதன் கரையிலும் அங்குள்ள திருப்பதிகளிலும் முன்னோர்களுக்கு சிராத்தம் செய்வது, அதன் நீரில் விழுந்து உடலை நீப்பது, தான தருமங்களைச் செய்வது, இப்படி கங்கை சம்பந்தமான ஒழுக்கங்கள் பல கூறப்படுகின்றன. வேதாந்த அறிவு சிறிதுமில்லா தாரும் கங்கா - யமுனா சங்கமம் என்ற பிரயாகையில் உடலை விடுவதால் முத்தியடைகிறார்கள் என்று வேதம், புராணம், ஸ்மிருதி முதலியவை கூறும். கங்கையின் மான்மியம், கங்கை சம்பந்தமாக நடத்த வேண்டிய அனுஷ்டான முறை, இவை அனைத்தும் தொகுக்கப்பட் டுத் திரிஸ்தலி சேது, கங்கா வாக்கியாவனி முதலிய தரும நூல்களில் தரப்பட்டிருக்கின்றன. ஸ்காந்த புரா ணத்தில் காசி கண்டம் முழுதும் காசியை வைத்துக் கொண்டு கங்கையின் மான்மியம் விவரிக்கப்பட்டிருக் கிறது. காசியாத்திரை விதி, பஞ்சக்குரோச மகாத்மியம் முதலிய நூல்களும் இவற்றையே விளக்குவனவாகும். வைதிக யாத்திரிகர் , ' கங்கா, கங்கா' என்று செபித்துக் கொண்டு போவார்கள்; ஒரு சிறு பாத்திரத்தில் கங்கை நீரை அடைத்துக் கொண்டுவந்து வீட்டில் வைத்துப் பூசை செய்வர், கங்கை யாத்திரை இராமேசுவர யாத் திரையோடு பூர்த்தியாவதால் நாள்தோறும் யாத்திரிகர் கங்கைகொண்ட சோழபுரம் கள் கொண்டுவரும் கங்கைநீர் இராமேசுவர லிங்கத் திற்கு அபிஷேகமாய்க் கொண்டிருக்கிறது. கங்கை - ராமே சுவரயாத்திரை மூலம் பண்டைக்காலத்தில் நாட்டின் ஓற்றுமை வலுப்பட்டதோடு, அறிவாளிகளும், அவர் கள் எழுதிய நூல்களும் வடக்கிலும் தெற்கிலும் பரவ வசதி யேற்பட்டது. கங்கை, காயத்திரி, கீதை இம்மூன்று ககாரங்களுக்கு மேலான ககாரம் இல்லை என்று ஒரு சுலோகம் உண்டு. கங்கையை யோகிகள் மாநிலத்தில் வெளியே நீராடும் ஆறாகக் கருதுவதில்லை; அதை ஒவ்வொரு மெய்யினுள் ளும் ஓடும் நாடியாகக் கருதுவர். கங்கை - யமுனை -சரசு வதி என்ற திரிவேணி சங்கமம் இடை, பிங்கலை, சுழு முனை என்று யோக நூலில் பேசப்படும் யோகப் பயிற் சிக்கு அடிப்படையான மூன்று நாடிகளே என்றும் கருதுவர். வே.ரா. கங்கை கொண்ட சோழபுரம் : திருச்சிராப் பள்ளி மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் இப்பெயர் கொண்டுள்ள இச்சிற்றூர், கங்கை கொண்ட சோழன் என்று விருது பெற்று விளங்கிய முதலாம் இராசேந்திரன் (1012-1044) என்னும் சோழ மன்னன் காலத்தில் அவன் வெற்றிக்கு அறிகுறியாக நிறுவப் பட்ட பெரும் பகுதியாக இருந்தது; அன்று முதல் சோழரின் புதிய தலைநகருமாயிற்று. இராசேந்திரனுக் குக் கங்கைகொண்ட சோழன் என்ற பட்டப் பெயர் அவனுடைய வடநாட்டு வெற்றிகளுக்குப் பின்னரே ஏற்பட்டதால், அப்பெயர் பற்றிய நகரமும் அதில் எடுப்பிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழேச்சுரம் என்ற பெருங்கோயிலும் கி. பி. 1023-ஆம் ஆண்டிலே தான் தொடங்கப்பெற்றிருத்தல் வேண்டும். கங்கை கொண்ட வெற்றி இவ்வரசனது பத்தாம் ஆண்டுக்குப் பிற்பட்ட கல்வெட்டுச் சாசனங்களில் மெய்க்கீர்த்திகளில் கூறப்படுவதாலும், இவ்வூர்ச் சாசனங்களில் அவனு டைய பதினேழாமாண்டுக் கல்வெட்டொன்றிலே தான் முதல் தடவையாகக் 'கங்கைகொண்ட சோழபுரம்' என்ற பெயர் குறிக்கப்படுவதாலும், இந்நகரம் கி. பி. 1030-ல் வளர்ந்தோங்கியது என ஊகிக்கலாம். 'கங்காபுரி' என்று வடமொழி நூல்களிலும், கலிங் கத்துப்பரணி, விக்கிரம சோழனுலா முதலிய தமிழ் நூல்களிலும், 'கங்காபுரம்' என்று தண்டியலங்கார மேற்கோள்களிலும், 'கங்கை மாநகர்' என்று வீர ராசேந்திரன் மெய்க்கீர்த்தியிலும் புகழப்படுவது இந் நகரே. கங்கைகொண்டான் என்ற பெயரோடு இப் பொழுது மிகச் சீர்குலைந்து சிறு குடியாகத் தோன்றும் இச்சிற்றூரைச் சுற்றியுள்ள இடிபாடுகளை நோக்கும் பொழுது, இப்பண்டை நகரம் சுமார் நான்கு மைல் சதுர அமைப்புடையதாய்ப் பெரிய மதில்களால் சூழப் பட்டு, அகத்தே பல மாடமாளிகைகள் கொண்டிருந் தது என்பது விளங்கும். இவ்வூரின் தென்கிழக்கில் இன்று காணும் செங்கல் மேடுகளும், திட்டுக்களும், அகழியின் சிதைவுகளும், இந்நகரின் வெளிப்புரிசையின் சின்னங்களாம். இதனுட்பட்ட மேடுகள் அரண்மனை போன்ற கட்டடச் சிதைவுகளாம். இங்குக் கிடைக்கும் சுடுமண் கற்கள் மற்றப் பண்டைக் காலத்துக் கற்களைப் போல மிகப் பெரிய அளவுள்ளவை. இதன் மேற்கில் ஒரு மைல் தொலைவில் காணப்படும் சுமார் பதினாறு மைல் நீளமுள்ள இடிந்த கரையே சோழர் காலத்தில் விளங்கிய 'சோழகங்கன்' என்ற பொன்னேரியின் கரையாகும். கரை யீடிந்து, படுகை தூர்ந்து, மேடிட் டுக் காடு மண்டிக் கிடக்கும் இப்பேரேரி கொள்ளிட நதியினின்று தென்புறம் புகுந்த சுமார் அறுபது மைல்