பக்கம்:கலைக்களஞ்சியம் 3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கைகொண்ட சோழபுரம் நீளமுள்ள வாய்க்கால் வழியாகவும், வடபுறம் புகுந்த வட வெள்ளாற்றிலிருந்து வரும் வாய்க்கால் வழியாக வும் நிரப்பப்படுகிறது. தன் தவ பலத்தால் அன்று பகீரதன் கங்கையைக் கொணர்ந்தது போலத் தன் தோள் வலியால் கங்கையைக் கொணர்ந்தான் என்றும், தன் வட

கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிருகதீசுவரர் கோயில் உதவி : தொல்பொருள் ரியல் இலாகா , சென்னை


நாட்டுத் திக்குவிசயத்தின் வெற்றிச் சின்னமாக 'ஜல மயமான ஜயஸ்தம்பம்' நாட்டினான் என்றும் இரா சேந்திரன் மெய்க்கீர்த்திகள் கூறுவதற்கு இந்த ஏரியே சான்றாகும்.

பிருகதீச்சுரம் அல்லது கங்கைகொண்ட சோழேச் சுரம் என்று பெயர்பெற்ற இப்பெருங்கோயிலின் சுற் றமைப்புக்கள் பெரும்பாலும் அழிந்துள்ளன. இங்கி ருந்து சுமார் 10 மைல் தொலைவிலுள்ள கொள்ளிட நதிக் குப் பேரணை ஒன்று கட்டவேண்டி, 1839 ஆம் ஆண் டின் அண்மையில் அக்காலத்து நீர்ப்பாசன எஞ்சினியர் கள் இக்கோயிலின் கற்கோபுரத்தை வெடி கொண்டு தகர்த்தும், கல் மதில்களை யிடித்தும் தங்கள் கட்டடத் திற்கு வேண்டிய கற்களைக் கொண்டு போயினர் என்ற செய்தி பழைய பத்திரங்களின் மூலம் தெளிவுபடும். பல கல்வெட்டுக்கள் கொண்டதும், சிற்பங்கள் கொண்டது மான இக்கோயிற் கற்களை இன்றும் கீழணைக்கட்டு என்ற கல்லணையில் பொருத்திக் கட்டியிருப்பதைக் காண லாம். கொண்டுபோனவை போக, மிகுதியை இக்கோயிலி லேயே வீட்டுச் சென்றதால், கோயிலைச் சுற்றி மொட் டைச் சுவர்களும், மொட்டைக் கோபுரங்களும், அங்கும் இங்கும் பல கற்குவியல்களும் இன்றுமிருக்கின்றன. இக் கோயில் பாதுகாக்கவேண்டிய புராதன நினைவுச் சின்ன மாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் ஓரளவு சீரடைந் துள்ளது. விமானங்களும் முகமண்டபங்களும் பழுது பார்க்கப்பட்டுள்ளன. சுற்றுப்புறங்களின் சீரமைப்புத் தொடர்ந்து நடந்து வருகிறது.

கங்கைகொண்ட சோழபுரம்

இவ்வாறு அழிந்துபோனவை கோயிலின் கிழக்குக் கோபுரமும், வடக்குக் கோபுர வாயிலும், 584 அடி நீளம், 372 அடி அகலமுள்ள மதிற்சுற்றும், அதன் உட்புறத்தில் அதையொட்டி அமைக்கப்பெற்றிருந்த சுற் றாலையுமாகும். அண்மையில் மதிலின் உட்புறத்தை


யொட்டிக் கிடந்த கற்குவியல்களை அகற்றி அகழ்ந்து கண்டதில், தஞ்சைப் பெரிய கோயிலில் அமைந்துள்ளது போலவே இக்கோயிலின் சுற்றாலை, பல சிறிய ஆலயங் களை யிணைத்துச் சென்ற திருச்சுற்று மண்டபமாக இருந்தது புலப்பட்டது. மதிலின் வெளிப்புறத்தே மூலைகளிலும் நடுவிலும் காணும் வளைந்த கொத்தளங் கள் பாளையக்காரர் காலத்தில் இக்கோயில் ஒரு சிறு கோட்டையாக அமைக்கப்பட்டது என்பதைக் காட் டும். திருமதிலினுள்ளே உள்ள பரந்த முற்றத்தின் நடுவே வானளாவி நிற்பது பிருகதீசுவரர் கோயிலின் பெரிய விமானம். அதன் முன்னர் மண்டபங்களும், விமா னத்தின் வடக்கிலும் தெற்கிலும் சண்டிகேசுவரர் ஆலய முட்பட ஐந்து சிறிய ஆலயங்களுமுள்ளன. விமானத் திற்குச் சற்று விலகி, வடக்கிலும் தெற்கிலும் சம தூரங் களில் வட கயிலாயம், தென் கயிலாயம் என்ற சிறு கோயில்களும், வட கயிலாயத்தின் முன்னர் அம்மன் கோயிலும், தென் கயிலாயத்தின் பின்னர் கணபதி கோயிலும் இப்பெருங்கோயிலின் அங்கங்களாக நிற் கின்றன. தென் கயிலாயம் இடியால் தாக்குண்டு இப் போது மிகச் சிதைவுற்றுள்ளது.

இக்கோயிலமைப்புப் பெரும்பாலும், இராசராசன் எடுப்பித்த தஞ்சைப் பெரிய கோயிலமைப்பைப் போன் றது. இரண்டு கோயில்களும் பெருங்கோயில், மாடக் கோயில் எனப்படும் விமானங்கள் கொண்டவை. உயர மான அதிட்டான மேடைமீது ஏற்றிக் கட்டப்பட்ட இரு கோயில்களின் கருப்பக்கிருகங்களும் இரண்டடுக்