பக்கம்:கலைக்களஞ்சியம் 3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கைகொண்ட சோழபுரம்

கக் கட்டடங்கள். இவ்வமைப்பு உள்ளேயிருக்கும் மிகப் பெரிதான இலிங்கத்தின் பரிமாணத்தை யொட்டி யது. மேலும் இவ்விரண்டடுக்குக் கருப்பக்கிருகத் தைச் சுற்றி விமானச் சுவரின் கனத்திலேயே அமைக் கப்பட்டுள்ள உள் சுற்றுப் பிராகாரம் இக்கோயில்களைச் 'சாந்தாரப்ரசாதம் ' என்ற வகையில் சேர்க்கும். ஆயி னும் தஞ்சைக் கோயிலைப் போலல்லாது இக்கோயிலின் கருப்பக் கிருகத்திற்கு முன் புறவாயி லொன்றே யுள்ளது. தஞ்சையிலுள்ளது போல் கிழக்கு வாயிலன் றித் தெற்கு, மேற்கு, வடக்குச் சுவர்களில் வாயில்க வில்லை. மேலும் விமானத்தின் கட்டுக்கோப்புத் தஞ் சையைப் போலத் தூபி வரை கல்லாலாயினும் ஏழு தளங்களே கொண்டது. இத்தளங்களின் கட்டமைப் பைத் தொலைவினின்று நோக்கும் போது நான்கு மூலை களும் வில்லைப் போல் உட்புறம் வளைந்தெழும்புந் தோற்றமளிக்கும். தஞ்சை விமானத்தின் தோற்றத் தில் இவ்வளைவு காணாது நிமிர்ந்தோங்கியிருக்கும் தோற்றமே காணும். இவ்வளைவுத் தோற்றம் பெண் வடிவை யொத்ததால் இம்மாதிரி 'ஜங்கா ' உடைய விமானங்கள் பெண் வடிவமெனவும், தஞ்சை விமானம் போன்றவை ஆண் வடிவம் எனவும் சிற்ப நூல்கள் பால் வகுத்துக் கூறும். ஆகவே தந்தையும் மகனும் தென்னாட்டில் இவ்விரண்டு வகை அதிசய விமானங்களை யெழுப்பிச் சிற்ப வாஸ்துக் கலைகளின் மேம்பாட்டைக் காட்டிப் போயுள்ளனர். விமானத்தின் அதிட்டானம் 100 அடி சதுரமும், 20 அடி உயரமும், பல சிற்ப விசித்திரங்களும் கொண்ட தெற்றி. இதன்மேல் நான்கு புறமும் சுற்றியோடும் ஆளோடியுடன் கூடிய மூலக் கருவறை 35 அடி உயரம் எழுந்து நிற்கிறது. இதன் புறச்சுவர்களில் உள்ள தேவகோட்டங்கள் என்னும் புரைகளில் பல அரிய சிற்பங்கள் உள, உட்பிராகாரம் 10 அடி அகலமுள்ளது. கருப்பக்கிருகத்தினுள்ளே 13 அடி உயரம் 20 அடி சுற்றளவுள்ள இலிங்க மூர்த்தி, சுமார் அதே உயரமும் 45 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார்மேல் பொருத்தப்பட்டுள்ளது. விமானத்தின் மொத்த உயரம் 190 அடியாகும். விமானத்தின் முன்னருள்ள மகா மண்டபத்தை அர்த்த மண்டபத்துடன் இணைக்கத் தென் வடலாகப் படிக்கட்டுக்களும் திருவாயில்களும் கொண்ட இடைகழி ஒன்றுள்ளது. முன்னுள்ள பெரிய மகா மண்டபம் 175 அடி நீளமும் 35 அடி அகலமுமுடை யது. மண்டபத்திற்குக் கிழக்கு வாயிலொன்றேயுள்ளது. இக்கோயிலின் பல வேறு வாயில்களை யொட்டி ஏறத் தாழப் பன்னிரண்டடி உயரங் கொண்ட பன்னிரண்டு துவார பாலகர் சிலைகள் கம்பீரத் தோற்றமளிக் கின்றன. பெரிய மகாமண்டபத்தினுள் பந்தி பந்தி யாக நிற்கும் 150 கற்கால்களில் நடுவிரு பந்திகள் 18 அடி உயரமும், சிறைப்பந்திகள் 16 அடி உயரமுமிருக் கின்றன. விமானம், முன் மண்டபங்களுட்பட இக் கோயிலின் மொத்த நீளம் 340 அடியாகும்.

மகா மண்டபத்தினுள் பல அரிய சிற்பங்கள் உள. அவற்றில் சம்பந்தப் பெருமான் உருவமும் சூரிய பீட மும் குறிப்பிடத்தக்கன. இச்சூரிய பீடம் ஒரு தேர் உருவாயுள்ளது. தேர்த்தட்டின் நடுவில் ஆதவன் ஓர் அலர்ந்த தாமரை யுருவமாக அமைக்கப்பெற்றுத் தட் டின் முன்புறம் பூட்டியுள்ள ஏழு குதிரைகளை முட வனான அருணன் ஓட்டுவதுபோல அச்சிற்பம் காட்சி யளிக்கிறது. மற்றும் இங்குள்ள செப்புத் திருமேனிகள் மிகச் சிறந்தவை ; சோழர் காலத்து வார்ப்பு வேலையின் மேம்பாட்டைக் காட்டுவன. விமானத்தின் புறச் சுவர் களிலும், மேல் தளங்களிலும், இடைகழியின் வாயிற்

கங்கைச் சமவெளி

புறங்களிலும் காணும் சிற்பங்களனைத்தும் மிகுந்த வனப்பு வாய்ந்தவை. திரிபுராந்தகர், சபாபதி, கங்கா தரர், உமாப் பிரசாதனர், கால சம்மார மூர்த்தி, விஷ்ணு , பிரமன், இலிங்கோற்பவர், சந்திரசேகரர், சண்டேசானுக்கிரகர், இலக்குமி, சரசுவதி, துர்க்கை முதலிய ஒவ்வொரு சிற்பமும் சோழர் சிற்பக்கலையின் உயர்வைக் காட்டும். இவற்றுள் மிகச் சிறந்தவை சண்டேசானுக்கிரக மூர்த்தியும் சரசுவதியுமாகும்.

இங்குள்ள திருக்காமக் கோட்டம் (அம்மன் கோயில்) இராசேந்திர சோழன் கட்டியதே. இதற்கு முன் போந்த கோயில்களுக்குத் திருக்காமக் கோட்டங்களமைப்பது இவன் காலத்தில் தொடங்கியதென்பது பல சான்று களாலும் தெளிவு. ஆகவே இக்கோயிலொன்றே விமானம், அக மண்டபம், முகமண்டபம், திருக்காமக் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருமதில், கோபுரங் கள் முதலிய அங்கங்கள் உள்ளிட்டு , யாவும் ஒரே காலத் தில் கட்டப்பட்ட பெருங் கோயிலாகும். இதற்கு மாறாகச் சிதம்பரம், திருவரங்கம் போன்ற பெருங் கோயில்கள் அவ்வப்போது ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்ட பரிவாராலயங்கள், மண்டபங்கள், கோபு ரங்கள் முதலியவற்றால் பல நூற்றாண்டுகளாகப் பெரு கியவை. கே. ஆர். ஸ்ரீ. கங்கைகொண்ட சோழன் (ஆ. கா. 1014 1044) முதலாம் இராசேந்திர சோழனுடைய சிறப்புப் பெயர்களில் ஒன்று. பார்க்க : இராசேந்திரன், கங்கை கொண்டான்.

கங்கைச் சமவெளி வட இந்தியாவிலுள்ள கங்கையாறும் பிரமபுத்திராவும் பாயும் மிகப் பெரிய சமவெளி. உலகிலுள்ள பெரிய சமவெளிகளில் ஒன்று. இதன் மேற்கில் சிந்து வெளியும், வடக்கில் இமயமலை யும், தெற்கில் மத்திய பீடபூமியும் உள்ளன.

இந்தச் சமவெளியின் நீளம் சு. 1000 மைல்; அகலம் சு. 400 மைல். மேற்கே மேடாகவும் கிழக்கே போகப் போகத் தாழ்ந்து சரிவாகவும் உள்ளது. நீர் வளமும் மண் வளமும் மிகுந்தது. இங்குக் கோடையில் வெப்பம் மிகுதி ; குளிர்காலத்தில் குளிர் மிகுதி. இங்குத் தென் மேற்குப் பருவக் காற்றினால் மழை பெய்கிறது. கட லோரத்தில் மழை மிகுதி; மேற்கே செல்லச் செல்ல மழை குறைவு.

இச் சமவெளியை மேற்குச் சமவெளி, மத்திய சம வெளி, கிழக்குச் சமவெளி அல்லது கழிமுகம் என மூன்றாகப் பிரிக்கலாம். மேற்குச் சமவெளி வடக்கே இமயமலையில் தொடங் கித் தென்கிழக்கில் கங்கையும் யமுனையும் கலக்கும் அலகா பாத் வரையில் பரந்துள்ளது. இதில் உத்தரப் பிர தேசமும் டெல்லியும் அடங்கியுள்ளன. இங்கு மழை குறைவு. இக்குறையை ஈடுசெய்யக் கால்வாய்கள் பல வெட்டப்பெற்றுள்ளன. கங்கை, யமுனை, காக்ரா , சாரதா ஆறுகளில் அணைகள் பல கட்டப்பெற்றுள்ளன. கீழ் யமுனைக் கால்வாய், ஆக்ராக் கால்வாய், வட கங்கைக் கால்வாய், தென் கங்கைக் கால்வாய் ஆகியவை முக்கிய மானவை. இவைகளால் உத்தரப் பிரதேசம் முழுவதும் நீர்ப்பாசன வசதி பெறுகிறது. இங்குக் குளிர்காலத்தில் கோதுமையும், கோடையில் பருத்தியும் நெல்லும் கரும் பும் பயிராகின்றன. மற்றும் சோளம், தினை, கம்பு, கேழ்வரகு முதலிய புன்செய்ப் பயிர்களும், ஆமணக்கு, எள், ஆளிவிதை முதலிய எண்ணெய் வித்துக்களும் பயி ராகின்றன.

இந்தச் சமவெளியின் தெற்கில் ஆடுமாடு வளர்த்தல், தோல் பதனிடுதல், உலோக வேலைகள் முதலிய கைத்