பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த முகம் 115

தன் கண்ணியிலே ஒரு பறவை சிக்கப்போகிறதென்று தாமோதரன் நிச்சயம் செய்துகொண்டான்.

'உங்களிடம் மிக அழகான சித்திரங்கள், அங்க அமைப்புக்களே நுணுக்கமாகக் காட்டும் முதல்தர மான படங்கள் பல இருக்கின்றனவாம். அவைகளே எல்லோரும் பார்க்கமுடியாதாம். அந்தப் படங் களைப் பார்க்கவேண்டுமென்பதற்காகவே வந்தேன்' என்றார் ஜமீன்தார்.

"ஆமாம்; சில பேருக்கு அவற்றின் அருமை தெரியாது. அவைகளைப் பார்த்து ரஸிக்கவும் தெரி யாது. ஆகையால் காட்டுவதில்லை" என்று தாமோ தரன் கூறினன்.

பிறகு அந்த வகையிலுள்ளவைகளே ஒவ்வொன் ருக எடுத்துக் காட்டிவந்தான்். ஜமீன்தார் பிரமித் துப்போர்ை. ஒரு சித்திரத்தைப் பார்ப்பார்; அதற்கு மேலே அழகுள்ள வேறு படமே இனி இராதென்று கினேப்பார். அடுத்த படத்தைப் பார்க்கும்போது பதின்மடங்கு ஆனந்தங்கொள்வார். அதற்குப் பின் வரும் படத்தைப் பார்த்துச் சொக்கிப்போவார். தாமோதரன் ஒன்றைவிட ஒன்று சிறந்ததாக உள்ள வற்றை வரிசையாகக் காட்டிக்கொண்டே வங்தான்்.

'உங்கள் சக்தியை நான் என்னவென்று சொல் வது! உங்களுக்கு லக்ஷ லக்ஷமாகக் கொடுக்கவேண் டும்' என்று ஜமீன்தார் பாராட்டினர். - -

'உங்களைப்போன்ற அருமை தெரிந்த பிரபுக்கள் சொல்லும் வார்த்தைகள் எவ்வளவோ லக்ஷம்