பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கலைஞன் தியாகம்

எப்படியோபதில் சொல்லிவிடுவேன். ஆனலும்'ஆலங் காயம் என்பதற்கு வகைகூற இயலவில்லை. அதைப் பிளந்து பார்த்து ஆராய்ச்சி செய்யுங்கள் என்று அவன் கூறவே நான் மெல்லச் சிங்தித்துப் பார்த் தேன்; கற்பனைக் குதிரையைத் தூண்டினேன். ஒரு வழி தெரிந்தது. .

'இப்போதுதான்் எனக்கு ஞாபகம் வருகிறது. எங்கேயோ படித்திருக்கிறேன். பாதிரிகளுடைய "டயரியிலிருந்தோ வேறு உத்தியோகஸ்தர்களுடைய குறிப்புக்களிலிருந்தோ ஒரு வரலாறு அறிந்துகொண் டிருக்கிறேன். அது மிகவும் ரஸமான சமாசாரம். இவ்வளவு நேரம் ஞாபகத்துக்கு வரவில்லை” என்று பீடிகை போட்டேன்.

'என்ன அது? சொல்லுங்கள்’ என்ருன் ராம சாமி,

கான் சொல்லத் தொடங்கினேன்.

米 米 米

அந்தக் காலத்தில்தான்் இங்கிலீஷ்காரர்கள் இந்தியாவுக்குப் புதிதாக வந்தார்கள். அவர்களு டைய அதிகாரம் சிறிது சிறிதாகப் பரவத் தொடங் கியது. அவ்வதிகாரத்தின் சார்பைத் துணையாகக் கொண்டு பல பாதிரிகள் இந்தியாவுக்கு வந்தார்கள். அவர்கள் இங்குள்ள அஞ்ஞானிகளுக்குப் பரம பிதா'வின் சிலாக்கியத்தையும் பரிசுத்த வேதத்தின் சிறப்பையும் பற்றிப் பிரசங்கம் செய்யலானர்கள். பலரை ஞானஸ்நானம் செய்வித்துக் கிறிஸ்துவர்க ளாக்கினர்கள். பெரும்பாலும் படித்தவர்களே