பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கலைஞன் தியாகம்

'இந்தக் கிழட்டு மனிசன் இப்போதுதான்் பிள்ளே யுறவு கொண்டாட வேணுமா? எங்கேயோ செளக் கியமாக இருந்தால் சரியென்று கண்காணுமல் த்ொலே கிறதுதான்ே. இப்போது இந்தப் பிள்ளையினுடைய சுகவாழ்வுக்கே விஷம் வைத்துவிட்டானே.”

'இந்தப் பயலே இதோடு விடப்படாது. கணுவுக் குக் கணு கழிக்கவேண்டும்'

இப்படி மகாஜனங்கள் இந்தப் பரிதாப நாடகத் தைப்பற்றி விமரிசனம் வெளியிட்டுக் கொண்டிருந் தார்கள். - . .

கிருஷ்ணன், மூர்ச்சை போ கும் வரை யில் முருகனே அடித்துவிட்டு வெறி பிடித்தவன் போல வீட்டிற்கு ஓடினன். ஒரே அடியாக அங்தக் கிழவனே-தன் தகப்பனே-அடித்துக் கொன்றுவிடு வதுபோன்ற ஆத்திரம் வந்தது. அவன்தான்ே அந்தப் பயலே வீட்டிலே சேர்த்து வளர்த்தான்்? பிள்ளையைப் போலக் கொண்டாடினன்? பிள்ளையைக் காட்டிலும் அதிகமாக வாஞ்சை வைத்தான்்? தன்னேக்கூட அலகவியம் செய்தான்்? வேண்டும்! நன்ருகவேண்டும்-பொருமைத்தியின் கொழுந்தி லிருந்து எழுங்த எண்ணங்கள் இவை. அவன் முருகனது கலைத்திறமையை மறந்தான்். அவனல் தனக்கு உண்டான லாபத்தை மறந்தான்். முருகன் பண்ணிய பெரிய பாதகத்துக்குக் கிழவன்கூட உடந்தை யென்றே கிருஷ்ணன் எண்ணினன். ‘இனிமேல் கிழவன் முருகனைப் பாராட்டமாட்டான்' என்று எண்ணியபோது கிருஷ்ணனுக்கு ஒரு வகையான ஆறுதல் உண்டாயிற்று. கெடு காளாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/18&oldid=686180" இலிருந்து மீள்விக்கப்பட்டது