பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் தியாகம் 11

இருந்த ஒரு பகைவனே வெற்றி கொண்டாற் போன்ற ஆறுதல் அது. - - சக்கிலியக் கிழவன், மூர்ச்சை போட்டு விழுந்த தன் மகனே - இனிமேல் முருகன் அங்தச் சக்கிலிய னுக்கு மகன்தான்ே? - மெதுவாக எடுத்து முகத்தில் தண்ணிர் தெளித்து மெல்ல மெல்லக் குடிசைக்குக் கூட்டிக்கொண்டு போனன். அவனுக்கு விஷயம் விளங்கியது; "ஐயோ! நான் மகா பாவி! என் அருமை மகனுக்கு வந்த வாழ்வையெல்லாம் போக்கி விட்டேனே' என்று அழுதான்். இனிமேல் அழுவ தால் ஆவதென்ன? X

கிருஷ்ணன் தலைவிரி கோலமாக ஓடிவந்தான்்.

கிழவன், முருகனையும் கிருஷ்ணனேயும் எதிர்பார்த்துக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தான்். ே காசமாய்ப் போக உன்னல் அல்லவா இந்தக் குடித்தனத்துக்கே பழி வந்தது? அங்தப் பயலுக்கு எத்தனே இடங்கொடுத்தாய்? என்று உறுமினன் கிருஷ்ணன். இடி இடித்ததுபோல இரு ங் த து கிழவனுக்கு. இவ்வளவுதூரம் மரியாதை தப்பிக் கிருஷ்ணன் பேசியதேயில்லே. .

“என்னப்பா சங்கதி?’ என்று மெதுவாகக் கேட்டான் கிழவன்.

'என்னவா? நீயும் நானும் என் குழங்தைகளும் கல்லேக் கட்டிக்கொண்டு கிணற்றில் விழுந்து செத்துப் போக வேண்டியதுதான்். அந்தச் சக்கிலியப் பயல் சாதியைக் கெடுத்துவிட்டான். படுபாவி! எங்கேயோ சனியன்மாதிரி வந்து சேர்ந்தான்்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/19&oldid=686181" இலிருந்து மீள்விக்கப்பட்டது