பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கலைஞன் - தியாகம்

கிழவனுக்குக் கலக்கமாக இருந்தது; ஒன்றும் தெளிவாகவில்லை. -

'சக்கிலியப்பயலே இத்தனே வருஷங்களாக வீட்டிலே வைத்துச் சோறுபோட்ட பாவத்தை இனி எப்படித் தொலைப்பேன்!” என்று தலையிலே அடித்துக்கொண்டு அழுதான்் கிருஷ்ணன்.

கிழவன் தன்னே மறந்தான்். மயக்கம் போட்டு விழும் நிலையில் இருந்தான்். வீட்டுக்குள்ளிருந்து எல்லோரும் வந்துவிட்டார்கள். மாமன், மச்சான் முதலிய உறவின்முறையினர் வந்தார்கள். - --

கிழவன் கண்ணே மூடி க் கொண் டான். அவனுடைய நெஞ்சு அடைத்துக்கொண்டது. எந்த உலகத்திலே இருக்கிருேமென்ற கினே ைவயே இழந்தான்். பேயறைந்தாற் போன்ற மதிமயக்கம் அவனுக்கு உண்டாயிற்று. -

3

கிருஷ்ணபிள்ளை பணக்காரனாகி விட்டான்; ஆகையால் அவன் சாமிக்குப் பூசை போட்டும் வேறு பல சாங்கியங்கள் செய்தும் மறுபடியும் சாதியிலே சேர்ந்துகொண்டான். அவனுடைய உள்ளத்திலே பொருமைப் பேயின் கடைசி விருப்பம் ஒன்று இருந்தது. இந்தப் பயல் கம் வீட்டிலே கற்றுக் கொண்ட தொழிலினல் லாபம் சம்பாதிப்பான். அப்படிச் செய்யும்படி விடக்கூடாது. இவன் கையை முறித்துப் போட்டுவிடவேண்டும். இல்லாவிட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/20&oldid=686182" இலிருந்து மீள்விக்கப்பட்டது