பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிட்டாய்க்காரன் 177

மட்டும் அவனுக்கு வியாபார மந்தம் நேரும்; அன்றைக்கு அலைச்சலும் அதிகமாக இருக்கும். வியாபாரத்திற்கு லீவு விட முடியுமா? வயிற்றிக்கு 'வீவு கொடுத்தால் அது முடியும்.

பிச்சைச் சோற்றில் சனி புகுந்தாற்போல இந்த வியாபாரத்தில் போட்டி உண்டாகிவிட்டது. முனி சாமி மிட்டாயை மாத்திரம் வியாபாரம் செய்வதில் பழைய லாபத்தைக் காணவில்லை. புதிய புதிய சரக்கு களே அவன் விற்கத் தொடங்கினன். க ட லே உருண்டை, எள்ளுருண்டை, மாங்காய்க் கீறு இவை யெல்லாம் அவன் தட்டில் இடங் கொண்டன.

ஞாயிற்றுக்கிழமைகளில் தன் வீட்டிலேயே ஒரு வாரத்துக்கு வேண்டிய மிட்டாய்களைச் செய்வான். அவன் மனைவி உதவி செய்வாள். அவள் காலு வீடுகளில் வாசல் பெருக்கியும் பாத்திரம் தேய்த்தும் மாசம் காலு ரூபாய் சம்பாதித்தாள். இரண்டு பேரும் ஏதோ கிடைத்ததை வைத்துக்கொண்டு கஞ்சியோ கூழோ காய்ச்சிக் குடித்து இல்லற வாழ்க்கையை கடத்தி வந்தார்கள். அவர்களுடைய அன்புக்கு அடையாளமாக ஓர் ஆண்குழந்தை பிறந்து வளர்ந்து வங்தது. . - -

பள்ளிக்கூடங்களில் கோடை வி டு முறை தொடங்கிவிட்டது. ஒன்றரைமாதம் அந்தக் கூடு களில் குழந்தைகளின் சலசலப்புச் சத்தம் கேள்ாது. அந்த இடத்தில் இருந்த அழகு, ஜீவன் மறைந்து கின்றது. முனியனுடைய தோற்றமும் அதன் வாசலில் காணவில்லை.

12 .