பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிட்டாய்க்காரன் 179

அதற்கு அங்த மிட்டாயில் சிங்தினதைக்கூடக் கொடுக்க அவனுக்கு மனம் வராது. மிட்டாய் தின்னும் அக்தஸ்து அதற்கு இல்லையென்பது ஒரு காரணம்; அதற்குமேல் வேறொரு காரணமும் உண்டு. ஒருநாள் கொடுத்துப் பழக்கம் பண்ணிவிட்டால் பிறகு பெரிய தொந்தரவாகிவிடும் என்று அவன் சொல்லுவான். ஆனாலும் குழந்தைக்கு இங் த க் காரணங்களின் கியாய அரியாயங்கள் தெரியுமா?

'அப்பா, எனக்கு ஒரு மிட்டாயி' என்று சிணுங் கும் குழங்தை.

'ஒதைதான்்' என்று சீறிவிழுவான் முனிசாமி. மற்றக் குழங்தைகளிடம் இனிமையாகப் பேசி வியா பாரம் செய்யும் அவனுக்குத் தன் குழந்தையினிடம் பிரியமாகப் பேசத் தெரியவில்லை. அவனுக்கு அந்தக் குழந்தைகள் வாடிக்கைக்காரர்கள்'; இந்தக் குழங் தையோ தன் அதிகாரத்துக்கு அடங்கியிருக்கவேண் டிய குட்டி அடிமை. அப்படி அவன் கினைத்தான்ே இல்லையோ, அவனுடைய அன்ருடங் காய்ச்சிப் பிழைப்பு அவனே அப்படி ஆக்கிவிட்டது.

'கொளங்தைக்கு என்ன தெரியும்? அதுங்கிட்டே வள்ளுன்னு உளுறயே!” என்று அவன் மனைவி கேட்பாள். -

"போடீ களுதெ; இவனுக்கு மிட்டாயி இல்லாமத்தான்் கொறைஞ்சு போச்சோ' என்று உறுமுவான். - . . . . - அட பாவி; கொளங்தைக்குக் குடுக்காமே என் னத்தைச் சேத்து வச்சுட்டோம்' என்று அவள் மனத் துக்குள் முனகுவாள். -