பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 கலைஞன் தியாகம்

யில்லையென்று தெரிந்ததுமுதல் சீனுவுக்கும் உடம்பு இளைத்துவங்தது. மற்றவர்களெல்லாம் கண் விழித் துக்கொண்டு ராமுவின் அருகில் இருப்பார்கள். பாவம்! சீனு குழங்தைதான்ே? தன்னல் ஆனவரைக் கும் அந்தப் படுக்கையண்டை உட்கார்ந்திருப்பான். சினு, நாளேக்கு நான் பட்டணம் போறேன்; வறயா?”, “நான் பள்ளிக்கூடம் போறேன், வறயா?” என்றெல்லாம் அர்த்தமில்லாத கேள்விகள் பல அவன் வாயிலிருந்து வரும். அப்படிக் கேட்கும் போதே அந்த ஏழைக் குழந்தை உள்ளத்தில் ஏதோ திக்குத் திக்கென்று அடித்துக்கொண்டே இருக்கும். ஏதோ ஆபத்து வரப்போகிறதென்ற குசனே அந்த உள்ளத்திலே, புரிந்துகொள்ளாதபடி உண்டாயிற்று. எவ்வளவு நாழிகை விழித்துக்கொண்டிருப்பான்? அப்படியே அயர்ந்துபோய்த் துங்கிவிடுவான். அப் பொழுது அவனை எடுத்து வேறு படுக்கையில் விடு வார்கள். அந்தச் சமயத்தில் அவன் விழித்துக் கொண்டால்கூடப் பிடிவாதம் பிடித்து ராமுவின் அருகிலேயே விடும்படி கத்துவான். காலேயிலே எழும்பொழுது தன் படுக்கைக்கருகில் ராமுவைக் காணுவிட்டால் கத்திக்கொண்டே ஓடி அவனிடம் வந்துவிடுவான். -

ராமு ஜுரவேகத்தில் ஒன்றுமே வாய் திறப்ப தில்லை. அவனுடைய சோர்ந்துபோன கண்கள். துக்கத்தில் ஆழ்ந்த சீனுவின் கண்களோடு பேசும். அவை தமக்குள் என்ன பேசிக்கொண்டனவோ! யார் அறிவார்கள்: அக்கண்கள் சீனுவின் விழிகளின் ஆழத்தில் அன்பென்னும் மணியைக் கண்டிருக்க