பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கலைஞன் தியாகம்

திடுக்கிட்டான்; 'அண்ணே, அப்பன் செளக்கியமா? என்று கேட்டான். - -

"சீ கழுதை அண்ணளுவது அப்பளுவது! சக்கிலிய காய்க்கு என்ன துணிச்சல் என்னே இனிமேல் அப்படிக் கூப்பிடாதே' என்று சீறிவிழுங் தான்் கிருஷ்ணன்.

தன்னக் குற்றுயிரும் குலேயுயிருமாக அடித்துப் போட்டதோடு கிருஷ்ணனது கோபம் கிற்கவில்லே யென்பதை அந்தப் பேச்சிலிருந்து முருகன் உணர்ந்து கொண்டான். 'அண்ணே’ என்று கூப்பிடாமல் பின் எப்படிக் கூப்பிடுவதென்று அவன் மனத்தில் தோன்றவில்லை. தட்டுத் தடுமாறினன்.

'உங்கள் தகப்பனர் செளக்கியமாக இருக்கிருர் களா?' என்று மரியாதைப் பாஷையிலே கேட்டான். கேட்கும்போது துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது. - - -

காயே! அதெல்லாம் உனக்கு எதற்கு? போதும் கேடிம விசாரணை இங்கே உனக்கு ஓர் எச்சரிக்கை செய்வதற்காக வந்தேன். கேள்.”

சொல்லுங்கள்' என்று நடுங்கிக்கொண்டு பேசினன் முருகன்.

"எங்கள் அப்பன் மேல் ஆணை. இனிமேல் நீ மண்பொம்மை செய்யக்கூடாது. செய்தால் உன் கையை ஒடித்துச் சரியான தண்டனை விதிப்பேன். எங்கள் வீட்டுச் சொத்து அது. அது உனக்குப் பாத்தியம் இல்லை. நீ பொம்மை பண்ணி லாபம் ஸம்பாதிக்கக்கூடாது; தெரிகிறதா?’ என்று அதிகார தோரணையில் கிருஷ்ணன் கூறினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/22&oldid=686184" இலிருந்து மீள்விக்கப்பட்டது