பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கலைஞன் தியாகம்,

முருகன் சுலபமாகக் கற்றுக்கொண்டான். அதிலும் ஒரளவு அவனுக்குத் திறமை உண்டாயிற்று.

பொம்மை பண்ணுவான்; மிகவும் சிரமப்பட்டுப் பண்ணுவான். அவன் தகப்பன் அவைகளே விற்க லாமென்று சொல்வான். முருகனுக்கு விற்க மனம் வருவதில்லை. 'எங்கள் அப்பனுக்குக் காட்டாத பொம்மை மனிதர் கைக்குப் போகக்கூடாது” என்று சொல்வான். -

"அப்படியால்ை நீ எதற்காகக் கரசைச் செல. வழித்து வர்ணம் வாங்கி இதெல்லாம் செய்கிருய்? அந்த நேரத்தில் நாலு செருப்புத் தைத்தாலும் லாபம் கிடைக்குமே” என்பான் பெற்ற தகப்பன்.

'அதிலே எனக்குப் பொழுது போக்கும் ஆனந்தமும் உண்டு” என்று சொல்லிப் பலபல வென்று கண்ணிர் உதிர்ப்பான் முருகன். . . தகப்பனுக்கு அவனுடைய கலப்பித்து விளங்க வில்லே. - இந்த கிலேயில் பொழுது போக்குக்காகவும் ஆறு தலுக்காகவும் செய்துவங்த கலைவிளேயாட்டின் வாயில் கூட மண்விழும் காலம் வந்துவிட்டது. கிருஷ்ணன் ஆணேயிட்டுத் தடுக்கிருன். -

அண்ணே, நீங்கள் என்ன வேண்டுமானலும் செய்யுங்கள். ஏற்றுக்கொள்கிறேன். இந்தத் தண்டனே மட்டும் வேண்டாம். நான் வியாபாரத்திற்காகப் பொம்மைகள் செய்வதேயில்லை. ஏதோ பொழுது போக்குக்காகச் செய்கிறேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/24&oldid=686186" இலிருந்து மீள்விக்கப்பட்டது