பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கலைஞன் தியாகம்

கொண்டு ஆடல், பாடல், அழகு ஆகியவற்ருல் அவனு டைய மகிழ்ச்சியைத் தூண்டுகிருர்கள்.

மன்மதனுக்கு இதே ஞாபகம்: பஞ்சேந்திரியங் களுக்கும் இனிமையான வஸ்துக்களின்மேல் தன். னுடைய முத்திரையைப் போட்டு விட வேண்டு மென்ற சிங்தனே. கண்ணுக்கு அழகு, ஸ்பரிசத்திற்கு இனிமை, தீஞ்சுவை, நறுமணம், இன்னிசை இவை அமைந்த பொருள்கள் யாவை? அவைகளுட் சிறங் தவை எங்கே உள்ளன? - இந்த ஆராய்ச்சியில் அவன் உள்ளம் தலைப்பட்டது.

அவனது கடைக்கண் நோக்கினல் உத்தரவிடப் பட்ட கங்கை ஒருத்தி முன் வந்து பணிந்து நின்ருள். 'காமரூபிணி, இன்று நீ பூலோகத்திற்குச் செல் வாயாக. கண்ணுக்கு அழகான பொருள்களில் சிறங் தது எதுவோ அதைத் தேர்ந்து வா." - - - - -

"ஸ்வாமி, தேவரீர் சித்தம்.' - - தன் பனிச்சிறகை விரித்துப் பூமியில் இறங்கினுள் அவ்வழகி, "அழகு எங்கே அழகு எங்கே?' என்று அவள் கண்கள் ஆராய்ந்தன. ஒன்றனேயொன்று மோதி யெழுந்த அலைகளே வீசிய கடலைக் கண்டாள்; அதன் கரையிலே வெள்ளி வெண் சிறகுகளைக் கோதிய காரைக் கூட்டங்களில் அவள் கண் நுழைந்தது; நீல வானத்திலும் வானே முட்டிய மலைகளிலும் பூமியின் மேற்பரப்பில் கோடு கிழித்துச் செல்லும் நதிகளிலும் அவள் பார்வை சென்றது. எல்லாம் அழகின் திருக் கோயில்களே. ஆனாலும்-; அவள் மனத்திற்குத் திருப்தி உண்டாகவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/38&oldid=686200" இலிருந்து மீள்விக்கப்பட்டது