பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலரின் குறை 35

தென்றல் வழி காட்ட அவள் பூம்பொழிவிற் புகுந்தாள். மலரின் நறுமணம் காந்தம் போல அவளே இழுத்துச் சென்றது. அங்கே அவள் மெய்ம்மறந்து அந்த ஸ்வாஸ்னேயில் ஒன்றி நின்ருள்.

நறுமணத்திற் சிறந்த பொருள் மலரே என்ற சித்தாந்தம் நான்காவது நாளில் காமன் அவைக் களத்தில் நிறுவப்பட்டது.

5

இந்த விஷயங்களை மலர் அறிந்துகொண்டது. தென்றலிளங் குழவி அதற்கு உண்டாயிருக்கும் உன்னதப் பதவியைக் கூறியது. காமனுடைய லோகத்தில் தன் புகழ் பரவுவதை அறிந்தபோது அதற்குச் சிறிது செருக்கு உண்டாயிற்று; நான் அழகி, மெல்லியல், இன்சுவைத் தேனுடையவள், ஸ்-வாஸினி என்ற எண்ணம் அதன் மனத்தில் திரும்பத் திரும்ப உதித்தது.

அன்று காமதேவன் ஐந்தாவது சோதனைக்கு ஆளனுப்பினன். கானவிலாஸினி அந்தக் கைங்கரி யத்தை ஏற்றுக்கொண்டாள். இன்னிசைக் கீதம் இயற்கையிலே எங்கெங்கே உண்டோ அங்கெல்லாம் தேடத் தலைப்பட்டாள். வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலின் பிரணவ கோஷம் அவள் உள்ளத்தை உருக்கவில்லை. மரத்தின் மூலையிலே அடங்கி யொடுங்கி வஸந்த காலத்தில் மட்டும் கூவும் குயிலின் குரல் அவளுக்கு உவப்பை உண்டாக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/43&oldid=686205" இலிருந்து மீள்விக்கப்பட்டது