பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கலைஞன் தியாகம்

"ஸ்க்தோஷம்! நீயே போற்றற் குரியவள். நீயே காமதேவனுக்கு உகந்தவள். நீ வாழ்க!” என்று வாழ்த்திவிட்டுச் சென்ருள். - -

அன்று பஞ்சேந்திரியங்களுக்கும் இனிமை தரும் பொருள் மலர் என்ற உண்மையைக் காமதேவன் உணர்ந்தான்். அதைத் தனதாக்கிக் கொள்ளத் திருவுள்ள்ம் வைத்தான்்.

'இந்திரியங்களை மயக்குவிக்கும் மலர்கள் கம் அஸ்திரங்களாகுக! ஐம்பொறி உணர்ச்சிக்கும் களிப் பூட்டும் அவையே கமக்குரிய படைக்கலம். அவற்றைக் கொண்டு ஸர்வலோகத்தையும் காம் அடிப்படுத்தி விடுவோம். பஞ்சேந்திரியங்களையும் 5ம் வசப்படுத்த நமக்கு ஐந்து அம்புகள் வேண்டும். அவை ஐந்தும் மலர்களாகவே ஆகுக' என்று அவன் திருவாய் மலர்ந்தருளினன். அன்று முதல் காமக் கடவுள் பஞ்ச புஷ்ப பாணன் ஆன்ை.

மலர்மகள் வண்டை அணைத்துக் கொண்டாள்; 'உன்னல் அல்லவோ இந்த நிலை எனக்கு வந்தது' என்று மலர் கொஞ்சியது. வண்டும் அதன் காதலே உணர்ந்து முத்தமிட்டது.

'காமதேவனது படைக்கலமாவதென்பது கன விலும் எண்ண முடியாத காரியம். என்னுடைய குறைவு கிரம்பாமல் இருந்தால் எனக்கு இந்த இணே யற்ற பதவி வந்திராது. இந்தக் குறையை நீயே நிறை வேற்றிய்ை. எல்லாம் நீ தந்த வாழ்வு யான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்! என்னிடம் தேன் உளது. இந்தா அது இன்று முதல் உனக்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/46&oldid=686208" இலிருந்து மீள்விக்கப்பட்டது