பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கலைஞன் தியாகம்

அண்ணுவிடம் பேசினேன். எனக்கு ஒன்றும் தெரியாது. இந்தக் காலத்தில் இந்தமாதிரி விஷயங் களில் பிள்ளைகளுடைய விருப்பத்தின்படியே விட்டு விடுவதுதான்் நல்லது என்று யோக்யமாகச் சொல்லி விட்டார். அவனிடம் பேசினேன். பல்லே இளித்தான்்; உபசாரம் சொன்னன். பதியிைரம் ரூபாய் ரொக்க மாகக் கொடுக்கவேண்டுமாம்; வ யி ரக் க. டு க் கன் மண்ணுங்கட்டி தெருப்புழுதி எல்லாம் பதியிைரத் துக்குச் செய்யவேண்டுமாம். பார்த்தாயல்லவா.உங்கள் அண்ணன் வீட்டுச் சம்பந்தத்தை! நம்மேற் பிசகு. வேறு யாரையாவது போய்க் கேட்டிருந்தால் சலாம் போட்டுக்கொண்டு கல்யாணம் செய்துகொள்வான்.” 'நீங்கள்தான்் பதினுயிரத்துக்குச் செய்வதாக முன்பே சொல்லியிருக்கிறீர்களே.”

'லக்ஷரூபாய்க்குச் செய்வேன். அது என் இஷ்டம். இவன கேட்கிறது? பணத்தையா கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிருன் இவனுடைய பேராசை இப்பொழுதுதான்ே தெரிகிறது!’

"சரி, என்னதான்் செய்யப்போகிறீர்கள்? 'என்ன செய்வது? நானக ஒருவன் பேச்சுக்கு அடங்கி நடப்பதென்பது இந்த ஜன்மத்தில் இல்லை. அவ்வளவு ரூபாயும் இப்பொழுது இல்லை. இவ்வளவு பணப்பைத்தியம் பிடித்தவன் கல்யாணம் ஆனபின்பு நம்முடைய பெண்ணே நன்ருக வைத்திருப்பா னென்று எனக்குத் தோன்றவில்லை. எடுத்ததற் கெல்லாம் பணம் வாங்கி வா என்று துரத்தியடித் தாலும் அடிப்பான்.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/64&oldid=686226" இலிருந்து மீள்விக்கப்பட்டது