பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷப் ப்ரீrை 57

'அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். சட்டென்று வெட்டிப் பேசிவிட்டால் அப்புறம் ஒட்டாது. வள்ளிக்காகவாவது பார்க்கவேண்டாமா? இவ ளுடைய சந்தோஷத்தை காம் கெடுக்கலாமா?”

துரண்மறைவிலிருந்து. விக்கி விக்கி அழுங்குரல் கேட்டது. வள்ளிதான்் அங்ங்னம் அழுதாளென் பதைச் சொல்ல வேண்டுமா? முதலியாருக்குக் கொஞ்சம் கோபம் ஆறியது.

'சட்! பயித்தியம்! எதற்காக நீ அழுகிருய்? எங்களுக்கு உன் சந்தோஷத்தில் கருத்தில்லையா?” என்றார் முதலியார்.

- 米 * 米

பின்பு சில நாட்களாக வியாபாரப்பேச்சு கடந்தது. பொன்னம்பலம் இருபதியிைரத்திலிருந்து பதினே யாயிரத்துக்கு இறங்கிவந்தான்். ஆனாலும் அவன் மிடுக்குமட்டும் வரவர அதிகமாயிற்றே ஒழியக் குறையவேயில்லை. முதலியாருக்கு ரோஷம் பொறுக்க முடியவில்லை; சீ! இனி இந்தப் பயலிடம் கெஞ்சு வதில்லை என்ற உறுதி கொண்டுவிட்டார். - பாவம் வள்ளியின் உயிர்தான்் தேய்கிறது. தன் அருமைக்காதலன் இங்ங்ணம் நடந்துகொள்வதை அறிந்து மிகவும் வருந்தினுள்; அவன் காலடியில் விழுங்து கெஞ்சிக் கேட்கலாமென்று நினைத்தாள்; கடிதமாவது எழுதி யாரிடமாவது அனுப்பலாமென்று எண்ணினுள். ஒன்றும் முடியவில்லை.

திருவேங்கட முதலியாருக்கு அந்த வருஷ முடி வில் இருபத்தையாயிர ரூபாய் லாபம் வந்தது. 'கையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/65&oldid=686227" இலிருந்து மீள்விக்கப்பட்டது