பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii

'கலைமகள்' தொடர்பு வாய்த்தபிறகு சிறுகதை

எழுத வேண்டுமென்ற எனது அவா நிறைவேறத்

தொடங்கியது. அதன் விளைவே இந்தப் புஸ்தகம்.

நான் அவ்வப்போது 'கலைமகளிலும், 'ஆனந்த

விகடன் தீபாவளி மலர்கள், தினமணி' ஆண்டு மலர்,

'சுதேசமித்திரன்’ விஜயதசமி மலர், ஆனந்த

போதினி வெள்ளிவிழா மலர், 'பாரதமணி','லோகோ

பகாரி' ஆண்டு மலர் என்பவற்றிலும் எழுதிய கதை

களில் பதினெட்டு இதில் அடங்கியுள்ளன.

இவற்றை வெளியிட்டு ஆதரித்த பத்திரிகா

சிரியர்களுடைய பேரன்பைப் பாராட்டி என் நன்றி

யறிவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவற்றில் சில கதைகள் ஆங்கிலத்திலும் ஹிந்தி

முதலிய நம் நாட்டு மொழிகளிலும் அன்பர்களால்

மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கின்றன. அங்

வனம் மொழிபெயர்த்த அன்பர்களுக்கும் என்

நன்றியை உணர்த்துகின்றேன்.

கதையென்று எழுதினேன்; தமிழுலகம் இதை

வரவேற்குமென்று கருதுகிறேன்; புஸ்தகம் வெளி

வருகிறது. இனி, படிப்பவர்கள் உண்டு, புஸ்தகம்

உண்டு. நான் ஏன் கவலைப்படவேண்டும்?


கி. வா. ஜகந்நாதன்.

15–12—1941

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/7&oldid=1411793" இலிருந்து மீள்விக்கப்பட்டது