பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல் கிழவியின் நிழல்

റ്റ്.

வெயில்; படை பதைக்கும் வெயில். அந்த வெயிலில் கொத்தர்களும், கல் தச்சர்களும் வேலே செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு வேலை யிலே கண். வெயிலின் வெம்மையை அவர்கள் அவ்வளவாக உணரவில்லை. ஆயிரக்கணக்கான கூலி யாட்கள் அங்கே வேலை செய்துகொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான சிற்பியர் தங்கள் கலைத்திறனைக் காட்டினர். சிவபாதசேகரன், சோழ சக்கரவர்த்தி, இராஜராஜ சோழன் நெடுநாட்களாக, எண்ணி எண்ணிச் சங்கற்பம் செய்துகொண்ட காரியம்; ஒரு பிரும்மாண்டமான ஆலயத்தைத் தஞ்சைமாககளில் கிருமிக்கவேண்டுமென்று ஆர்வத்தோடு தொடங்கிய முயற்சி அது. - -

சோழ நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளும் பிற நாட்டிலிருந்து வங்த சிற்பிகளும் அந்தப் பெரிய கோயிலின் திருமாணத்திலே ஈடுபட்டிருந்தனர். சக்கரவர்த்தி கர்மதா நதியிலிருந்து பிரும்மாண்ட மான பாணலிங்கத்தைக் கொணர்ந்து ஜலவாஸம் செய்வித்திருந்தான்். தஞ்சைக்கு மூன்று மைல் துரத்திலிருந்து அந்த ஆலய விமானத்திற்குச் சாரம் கட்டியிருந்தார்கள். அந்த இடத்துக்குச் சாரப்பள்ள மென்னும் பெயர் இப்பொழுதும் வழங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/72&oldid=686234" இலிருந்து மீள்விக்கப்பட்டது