பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கலைஞன் தியாகம்

மிகச் சிறந்தது. ஒரு மைல் சுற்றளவுள்ள இடம் வாய்த் திருக்கும்போது அவருடைய மனோபாவத்துக்கு ஏற்ற படி, மாளிகையை நிர்மாணிக்கப் பஞ்சம் இல்லையே. பணத்தையும் தாராளமாக வீசினர். பங்களாவின் கட்டடத்தைவிட அதைச் சுற்றி அமைந்த சோலை யழகுதான்் சிறந்ததாக இருந்தது. கவருவமான புஷ்டச்செடிகளும் மேல்நாட்டுக் குரோட்டன்ஸ்' வகைகளும் கண்ணுக்கு ரம்யத்தைத் தரும் கொடி வகைகளும் லதாக்கிருகங்களும் ஊற்றுக்களும் அங்த வனத்திற்கு அழகை அளித்தன. பங்களாவின் பின் புறத்தில் மாதுளை, கொய்யா, ஒட்டுமாமரம் முதலிய பழமரங்களை வைத்து வளர்த்தார். - -

அவருக்குத் தக்கபடி தோட்டக்காரன் அமைங் தான்். குப்புசாமிக்குத் தோட்டவேலே கெடுகாட் பழக்கம். முதலியாருடைய தோட்டத்தில் இன்ன மூலையில் இன்ன செடி இருக்கிறதென்பது அவனுக்கு கிருடியாக இருந்தது. அவன் மனத்தில் அந்தச் சிங்காரவனத்தின் படம் சோபையோடு விளங்கியது. அவன் கூலிக்குமட்டும் வேலை செய்யவில்லை. அந்தச் செடிகளையும் மரங்களையும் கொடிகளையும் பார்ப் பதில் அவனுக்கு ஒரு தனி ஆனந்தம். 'குப்புசாமி இல்லாவிட்டால் இந்த இடம் இப்படி அமையுமா? என்று முதலியார் சில சமயங்களில் அவனேப் பாராட் டுவார்.

முதலியாரிடம் குப்புசாமி சொல்லும் யோசனை ஒன்றும் தவரு.து. அவனுக்கு அந்தத் தோட்டத்தை விருத்தி பண்ணுவதில் எவ்வளவோ ஆவல் ஊரி லுள்ள தோட்டக்காரர்களைச் சினேகம் பிடித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/90&oldid=686252" இலிருந்து மீள்விக்கப்பட்டது