பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோட்டக்காரன் 89

'உனக்கு உதவியாக கானும் ஏதாவது செய் கிறேன். எனக்குக் கூலி ஒன்றும் வேண்டாம். இவ் வளவு நாள் பழகிவிட்டுப் பிரிவதென்றால் கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய குழந்தையை விட்டுப் பிரிந்தால்கூட இவ்வளவு வருத்தம் உண்டாகாது” என்ருன் குப்புசாமி, . . .

'கிழட்டு மனிசன் ;ே நீ எனக்கு என்ன உதவி செய்யப்போகிருய்? போ, போ! அதிகமாகச் சொன் ல்ை எசமானிடம் சொல்லுவேன். அப்புறம் கல்தாத் தான்்” என்று கெஞ்சில் இரக்கம் இல்லாமல் ராrளத் தனத்தோடு புதிய தோட்டக்காரன் பதில் சொன் ன்ை.

"ஐயோ தெய்வமே' என்று அழுதுகொண்டே குப்பன் வீடுபோய்ச் சேர்ந்தான்்.

{ தினமும் ஒருமுறை அந்தப் பங்களாவின் வழியே `குப்புசாமி போவான். அதற்கு எதிரில் நிற்பான். காற்றில் அசையும் கொடிகளேயும் பார்ப்பான். ஒரே ஒட்டமாக உள்ளே ஓடவேண்டுமென்று தோன்றும். ஆனல் கதவைத் திறக்க அந்த ராக்ஷஸன் சம்மதிக்க மாட்டானே! அப்படியே கிழவன் கின்றுவிடுவான். அருமையாகப் பிறந்த குழந்தையைப் புதைத்துவிட்டு அவ்விடத்தருகே கின்று கண்ணிர்விடும் அன்புடைய தங்தையைப்போல அவன் விம்மி விம்பி அழுவான்.

எவ்வளவு நாள் அந்த மனிதனேக் கெஞ்சிப் பார்த்தான்்! ஒருகாளாவது அந்த ஒட்டுமாமரத்தை வந்து பார்க்கவேணும். உன் மனம் இரங்காதா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/97&oldid=686259" இலிருந்து மீள்விக்கப்பட்டது