பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

வாழும் கவிஞர்களில் வரலாற்றை நன்கறிந்த எங்கள் பேரவையின் தலைவர், ஊக்குவிப்புக் கவிஞர்-புதுமைகளைப் போற்றி மகிழ்பவர். அவர் சொல்லேற்று இல்லத்தில் கல்வெட்டு வைத்தோம். எழுத்துக்களை நூல் வடிவில் உலவ விட்டோம். ஆன்றோர்கள் வாழ்ந்தமைக்கு அவர் வாழ்ந்த ஊரிலேயே நினைவுக் கல்வெட்டு வைக்கும் திட்டத்தில் வரும் ஆண்டில் நாமக்கல் கவிஞருக்கு கல்வெட்டு நிறுவிடவும் திட்டமிட்டுள்ளோம். இடையே... தகுதி மிக்கவர்களைத் தகுதியுள்ளவர்கள் பாராட்டுவது தமிழகத்தில் குறைவு. ஆனால் எழுத்துச் சூரியன் கலைஞரை எங்கள் ஆசான் பாராட்டுகிறார்; ஆதாரத்தோடு, அவர் பாராட்டுகிற பாங்கு பாராட்டு என்ற சொல்லுக்கு இலக்கணம் படைக்கின்றது. இப்படித்தான் பாராட்ட வேண்டும் என்றும் வழிகாட்டுகிறது.

உரையை வெளியிட அனுமதித்த கவிஞர் பேருள்ளத்திற்கும், ஒளி அச்சு வடிவமைத்த என்.ஆர். கிராபிக்ஸ், முகப்பு அட்டை ஓவியம் தீட்டிய சென்னை ஓவியர் ஜமால், அச்சிட்ட சென்னை சேகர் ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆகியோருக்கும் நன்றி.::