உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 101 அதற்குப் பிறகு அந்தத் தீர்மானத்தை நாலைந்து மாதங்கள் கழித்து, 1961 பிப்ரவரி 24- ந் தேதியன்று அதே நண்பர் சின்னத்துரை அவர்கள் தான் கொண்டு வந்த தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை (உத்தி யோகப் பற்றற்ற நாளில்) தொடர்ந்து உரையாற்றினார். அந்த விவாதத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் அன்பழகன், திரு.ப. உ. சண்முகம் ஆகி யோர் கலந்து கொண்டு, தமிழ்நாடு பெயர் மாற்றத்துக் கான காரணங்களைக்கூறி, அதனை நிறைவேற்றுமாறு காங் கிரஸ் அரசைக் கேட்டுக் கொண்டனர். தீர்மானம் சி. சுப்பிரமணியம் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை, இறுதியாகத் தோழர் சின்னத்துரை அந்தத் தீர் மானத்தை வலியுறுத்த வில்லை;அப்போது சுப்பிரமணியம் ஒரு விளக்கம் தந்தார். அதாவது தமிழ் நாட்டுக் குள்ளே மாத்திரம் சென்னை ராஜ்யம் என்று எழுது வதற்குப் பதில் ‘தமிழ் நாடு' என்று எழுதலாம் என்பதேயாகும். பொய்யிலே பெரிய பொய்! அதோடு சின்னத்துரை திருப்தி அடைந்து தீர் மானத்தை வலியுறுத்தாது விட்டு விட்டார். ஆனால் கா. மு. செரீப்பின் கட்டுரை; நேர் மாறான தகவல்களைத் தந்திருக்கிறது. சந்தேக மிருந்தால் 1960 ஆகஸ்டு 19-ந் தேதி சட்டசபை நடவடிக்கைப் புத்தகம் பக்கம் -86-187 ஆகியவைகளையும்; 1961 பிப்ரவரி 24-ந் தேதி சட்டசபை நடவடிக்கைப் புத்தகம் 432 முதல் 486 வரையிலுள்ள பக்கங்களையும் படித்துப் பார்த்துக் கொள் ளலாம். " “நமது மாநிலத்திற்கு சென்னை ராஜ தானி' என்பது முதல் பெயராகும். அடுத்தது “மெட்ராஸ் ஸ்டேட்" என்பது, இவை