உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரனே! வெற்றி என்றைக்கும் உன் பக்கம்தான்! அன்பு நண்பா! வெற்றி பெற்ற நண்பனுக்கு நேற்று முன் தினமும்- தோல்வியுற்ற தோழனுக்கு நேற்றும் மடல்கள் தீட்டி னேன். பணிபுரிந்த வீரனே! இன்று உனக்குத் தீட்டுகிற மடல் அந்த இரண்டையும்விட எத்தனையோ விதத்தில் உயர்ந்தது. பெற்றவர்களைப் 120க்கு 68 இடங்களை இழந்துவிட்ட காங்கிரசார் மாநகராட்சித் தேர்தலில் வெற்றி போலக் குதிக்கிறார்களே; பார்த்தாயா? தி. மு. க. வுக்குச் சரிவு? காங்கிரசுக்குப் பலம் பெருகுகிறது? இதுவே வெற்றி! பெரிய வெற்றி!' என்றெல்லாம், பிறவிக் குருடன் கண் பெற்றது போல வும்- நொண்டி, கால்களைப் பெற்றது போலவும்-பிணம் உயிர் பெற்றது போலவும்-பேரானந்தம் கொண்டு குதியாய் குதிப்பதற்கு என்ன இருக்கிறது! தேர்தல் முடிவு தெரிந்ததும் சுப்பிரமணியனார் டெல் லிக்கு ஓடுகிறார். பிரதமரிடம் பெருமகிழ்ச்சி தெரிவிக்கிறார் டெல்லி வட்டாரங்களில் தன் பெருமையினைக் கூறுகிறார். நிஜலிங்கப்பா, சபாஷ் போடுகிறார். தேசாய், தித்திப்பான செய்தியென்று திருப்தி தெரிவிக்கிறார். என்றைக்குமே நம்மைப் பிடிக்காத மித்திரனார், "மாநகராட்சித் தேர்தல் என்றால் சாதாரணமல்ல- அது மிக முக்கியத்துவம் வாய்ந் தது" என்று எழுதுகிறார். இதே மித்திரனார், 1959ல் க .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/48&oldid=1691863" இலிருந்து மீள்விக்கப்பட்டது