உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 37 தி. மு. க. மாநகராட்சியில் வெற்றி பெற்ற போது எந்த 'ராகம்' பாடினார் என்பதை நாடறியும். சென்ற நகராட்சித் தேர்தலைவிட சென்னையில் சில இடங்களை அதிகம் பெற்றிருக்கிறது காங்கிரஸ்! அதுவும் காங்கிரசு முன்பு பெற்றிருந்த இடங்களைவிட அதிகம், அவ்வளவுதான்! நம்மைவிட அல்ல! காங்கிரஸ் முன்பு பெற்றிருந்த வாக்குகளைவிட சில ஆயிரம் வாக்குகளை அதிகம் பெற்றிருக்கிறது; அவ்வளவு தான்! அதுவும் நம்மைவிட அல்ல! இந்த நிலையில், மலடி பெற்ற மகன் போல- புதையல் எடுத்த தனம் போல அவர்கள் மகிழ்வதற்கு என்ன இருக் கிறது? ஒரு விதத்தில் மகிழ்ச்சியடையலாம் அவர்கள்! கழகத் தில் தூண்டிவிடப்பட்ட துரோக சக்திகளின் நேரிடை யான- மறைமுகமான - எதிர்ப்பால் கழகம் சில எதிர் பார்த்த இடங்களை இழந்திருக்கிறதல்லவா; அதற்காக க காங்கிரசார் மகிழ்ச்சி அடைவதிலும் - நீ; மனங் கலங்கு வதிலும் அர்த்தமுண்டு! நீ அயராது பாடுபட்டவன். அல்லும் பகலும் ஊனுறக்கமின்றி அலைந்து திரிந்து செயலாற்றியவன். கூலிக்கு மாரடித்தவன் அல்ல. கொடியுங் கையுமாக வீதிக்கு வீதி-வீட்டுக்கு வீடு சுழன்று சுழன்று; அண்ணன் மனம் மகிழ வெற்றி குவிக்க வேண்டுமென்று வெயில் என்றும் பாராமல் - மழையென்றும் பாராமல் பாடுபட்ட வன். உனக்குத் தெரியும் வெற்றியின் அருமை! நீ அறி வாய் அதற்கான சிரமங்களை! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/49&oldid=1691864" இலிருந்து மீள்விக்கப்பட்டது