உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 45. முட்டை மாத்திரம் வைக்கட்டுமா?" என்றான் பரி மாறியவன்! 6 டேய்! முட்டாள்! இப்படியெல்லாம் கேட்டு அவர் தகுதியைக் குறைக்காதே! சைவத்தைக் கெடுக்காதே! சாம்பார், காய்கறி இருந்தால் கொண்டு வந்து போடு!" என்றான் தந்திரி ஆத்திரமாக! 'எதுவும் இல்லீங்களே’ என்றான் - பரிமாறியவன், "பரவாயில்லை-ஒரு குவளை மோர் கொண்டு வந்து கொடு! அவர் குணம் தெரியாமல் விளையாடாதே! அவர் நம்மை மதித்துவந்ததே பெரியபாக்கியம்!அதற்குக் கைமா றாக அவருக்குப் புலால் உணவு கொடுத்து அவரது புனி தத்தைக் கெடுப்பதா?" என்று உணர்ச்சி பொங்கப் பேசினான் தந்திரி. கடைசியில் ஒரு குவளை மோருடன் விருந்தை முடித்துக் கொண்டார் தொண்டை மண்டலம். உள்ளூர எரிச்சல் தாளமுடியவில்லை. கோபமோ பொங்குகிறது! நாக்கிலோ நீர் ஊறுகிறது! எல்லாவற்றை யும் பொறுத்துக்கொண்டு, 'பாவி கெடுத்தானே; பலே சாப்பாட்டை!” என்று மனத்துக்குள் சபித்துக்கொண் டார். என்னப்பா மறவா; கடிதம் எழுதத் தொடங்கிக் கதை எழுதுகிறாய் என்று கேட்கத் தோன்றுகிறதா? சுப்பிரமணியம் அவர்களே! தாங்கள் பத்திரிகை நிரு பர்களுக்கு அளித்த பேட்டியில் காமராஜரைப் பற்றியும் நாகர்கோயில் தேர்தல் பற்றியும் விளக்கம் அளித்திருக் கிர்களை அதைப் படித்தபோது எனக்கு இந்த கதை தான் ஞாபகம் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/57&oldid=1691872" இலிருந்து மீள்விக்கப்பட்டது