உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 99 கலைஞர் தால் சுதந்திரா கட்சி, தி. மு. க. வுக்கு ஆதரவு தருவதை வாபஸ் வாங்கிக் கொள்ளும். இதுதான் அவர் விடுவித்த அறைகூவல். இன்றைக்கு அவர் இந்திரா காங்கிரசின் வேட்பாளர், சோசலிசம் படும்பாட்டைப் பார்த்தாயா? கட்சி சார்பாக போட்டியிடுபவர்களில் தி. மு. கழக வேட்பாளரும், பழைய காங்கிரஸ் வேட்பாளரும்தான் தங்கள் கட்சிகளில் நிலையாக இருப்பவர்கள். அதிலும் இரண்டாவது, இடையில் சற்றுத் தடுமாறி, பிறகு நிலை நிறுத்தப்பட்டது என்பது பலருக்குத் தெரியாது; சிலருக்குத் தான் தெரியும். கழக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம், நீண்ட நாட்களாக கழகத் தொண்டர். கழகம் நடத்திய போராட் டங்களில் ஈடுபட்டுச் சிறை புகுந்தவர்; அடக்குமுறைகளை ஏற்றுக் கொண்டவர். ா இந்திரா காங்கிரசுக்கு; இல்லை - இல்லை ஆளும் காங் கிரசுக்கு ஆதரவு திரட்ட வந்துள்ள மத்திய அமைச்சர்கள் நல்ல நகைச்சுவைப் பேச்சாளர்களாக விளங்குகிறார்கள். அவர்களில் ஒருவர் கூறியிருக்கிறார் - தி. மு. கழகம் முதலாளிகளின் கட்சி' என்று கழக அரசு முதலாளிகளுக் காகத் திட்டங்கள் தீட்டுகிறதாம். பஸ்களை . தேசியமயமாக்குவது, உழுபவனுக்கு நிலம் சொந்தமாக சட்டம் கொண்டுவந்தது, உழைப்பவருக்கு நிர்வாகத்தில் பொறுப்பும், முதலீட்டில் பங்கும் அளிக்கத் தொடங்கியிருப்பது, விவசாய வருமான வரி விதித்தது, விவசாயத் தொழிலாளர்களுக்குக் குடியிருப்பு மனைகளைச் சொந்தமாக்கியது, உச்ச வரம்பில் விதிவிலக்குகளை அகற்றியது - இதுபோன்ற காரியங்கள் எல்லாம் முதலாளி களுக்காகச் செய்யப்பட்டது என்பது அந்த மத்திய அமைச் சரின் வாதம் போலும். பாவம் பிர்லா, பஜாஜ், டாடா, பூட்டா, போன்ற ஏழைகளையே கவனிப்பவர்கள் அவர்கள்! 1