உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 101 நாம் என்ன சாதாரணம், கைரிக்ஷா இழுக்கும் கந்தனும் - கண்ணிழந்த கருப்பனும் - கையில் ஓடேந்தி பிச்சை எடுக்கும் காத்தானும்தான் நமக்குக் கண்ணில் படுகிறார்கள். இவர்களையெல்லாம் மத்திய அமைச்சர் - பிரபுக்கள், பண முதலாளிகள் என்று நினைக்கிறார் போலும்! . Q அந்த மத்திய அமைச்சர் இன்னொரு 'தமாஷ்' வெடியும் வெடித்திருக்கிறார். தமிழ் நாட்டில் தி. மு.க. அரசாங்கம் செய்கிற நல்ல காரியங்கள் காரியங்கள் அனைத்தும் மத்திய சர்க்கார் த்தரவுப்படி நடைபெறுகிறதாம். எப்படியோ ஒன்றை அவர் ஒப்புக் கொண்டார் - தி. மு. க. அரசில் நல்ல காரி யங்கள் நடைபெறுகின்றன என்பதை. அதுவரையில் அவருக்கு நன்றி! ஆனால் அந்தக் காரியங்கள் அனைத்தும் மத்திய அரசால்தான் ய உத்திரவிடப்பட்டு நடக்கின்றன என்று அவர் கூறும்போது நான் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மத்திய அரசு திட்டத் தொகை அளிக்கிறதாம் - அதைக் கொண்டு நாம் செலவு செய்கிறோமாம். முதலில் மாநிலங்கள் திரட்டும் தொகை, அதற்கேற்ப மத்திய அரசு அளிக்கும் திட்டத்தொகை, மாநிலங்களின் வரவு செலவு மதிப்பீடுகள் - இவைகளைப்பற்றியெல்லாம் அந்த அமைச்சர் நிதி இலாகா அதிகாரிகளிடம் பாடம் கேட்டுக் கொள்வது நல்லது. அவர் விஷயம் தெரியாமல் பேசினால், அவருக்காக அனுதாபம்! தெரிந்தும் வேண்டுமென்றே மக்களை ஏமாற்று வதற்காகப் பேசினால் அது தோற்றுப்போன பழைய ராஜ தந்திரம் என்று கூறுவதைவிட வேறு வழி இல்லை. இன்னொருவர் - புதுக் கட்சியின் தலைவர். அவர் நேற் றைக்கு பேசியதை இன்றைக்கு மறந்துவிடுவார். நேரத் திற்கு ஒரு பேச்சு! "கருணாநிதி பிறந்த நாளில் ரிக்ஷா கொடுப்பது யாருக்குத் தெரியுமா? தி. மு. க. ரிக்ஷாக் காரர்களுக்கு இது அவரது கண்டுபிடிப்பு!. மொத்தம் தமிழ் நாட்டில் இருக்கிற கை ரிக்ஷா இழுப்பவர்கள் க-7