உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 147 களுக்கு இன்று தாள் என்ன, தங்க ஆசனம் கூடக் கிடைக்க லாம். ஆனால் நாளை அவர்களின் நிலை-வெட்டப்பட்ட நகத்தின் நிலை தான்! நான் விழுப்புரம் மாநாட்டில் கூறியது போல நமது கழகம் சில இலட்சியங்களை ஈடேற்றுவதற்காகத் தொடங்கப் பட்டது. அந்த லட்சிய வெற்றிக்குக் கிளர்ச்சியோ அல்லது ஆட்சியோ போர்க்கருவிகளாக அமையும். அதற்காகக் கருவியே லட்சியமாகி விட முடியாது. லட்சியமாகி விடவும் கூடாது. அண்ணா வகுத்தளித்த சமதர்ம சமுதாயம் காணும் லட்சியமும், மாநில சுயாட்சி பெறும் லட்சியமும், தமிழ்மொழி, தமிழர் சமுதாய மேன்மைக்காகப் பாடுபடும் லட்சியமும் நமது உதிரத்தோடு ஊறி, நமது உயிர் மூச்சாக ஆகிவிட்டிருக்கின்றன. . அந்த லட்சிய வெற்றிக்கு எத்தனைபேர், எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருக்கிறோம் என்ற எண்ணிக் கையை நாட்டுக்கு அறிவிக்க வேண்டாமா? கழகத்தின் ஒவ்வொரு அமைப்பின் தேர்தலும் விரைவில் தாடங்கி, தலைமை அமைப்பின் தேர்தலையும் நாம் நடத்த இருக்கிறோம். நமது, கழகம் நடத்திய மும்முனைப் போராட்ட நாளான ஜூலை 15 முதல் உறுப்பினர் சேர்க்கும் தீவிர இயக்கம், பட்டி தொட்டிகள் முதல் பட்டினங்கள் பரவலாக நடைபெற்று வருகிறது. கள், வரை மானத்தமிழ் இளைஞர்கள், பெரியவர்கள், தாய்மார் சகோதரிகள் அனைவரும் தி. மு. கழகத்தின் போர் வாளாகத் தங்களை ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாள் தோறும் தலைமைக் கழகத்திற்கு வரும் உறுப்பினர் தாள்கள் அதைத்தான் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. பணி தொடரட்டும்!