உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கலைஞர் ‘புத்தர்’களைப்போல் வேடமிட்டுப் பொல்லாத் தொழிலை நடத்திக் களிக்கிறார்கள்! என்ன செய்வது! காஞ்சிபுரம் யானைக்கு என்ன நாமம் போடுவது? வடகலையா? தென்கலையா? என்ற போராட்டம் இன்னும் ஓயவில்லையே! அர்த்தமுள்ள இந்துமதத்தின் மகிமையல்லவா இது! உண்மை, ஆழ்ந்த பற்று, இலட்சியப் பிடிப்பு இவை களுக்கு மேலாக சில நேரங்களில் அதிசயக்கவர்ச்சிகள் மக்களை ஏமாளிகளாக்கி விடுகின்றன என்பதற்கு இவைகள் எல்லாம் எடுத்துக்காட்டுகள் அன்றோ! மாம்பழம் மங்கை வடிவு கொண்டதாக விளங்குகிறது: வியப்புக்குரிய ஒன்றுதான்! வேடிக்கை பார்க்க வேண்டியது தான். அதற்காக அதனையே ‘அப்சரஸ்' என வர்ணித்து 'ஆகாயலோகத்திலிருந்து நூலேணி வழியாக வந்திறங்கிப் பாலாற்றங்கரை மாந்தோப்பில் ஊஞ்சலாடும் ஊர்வசி, ரம்பை, மேனகை, என நம்பி அதற்குக் கோயில் கட்டத் திட்டமிடுவானேன்? அதற்கென உண்டியலில் பணம் போடுவானேன்? அதுவோ மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மாங் கனி! வடிவம்-மாங்கனி போன்றது! கவர்ச்சியாகத்தான் இருக்கும்! சில புதிய கட்சிகளைப்போல! வ்லையாம்-சில அந்த மாம்பழ மங்கைக்குக் கைகள் கவர்ச்சிக்கட்சிகளுக்குக் கொள்கைகள் இல்லாததைப்போல? மாம்பழ மங்கை மரத்தில் தொங்கும் வரையில் கூட்டம் இருக்கத்தான் செய்யும்; கீழே விழுந்த பிறகும் சில நாட்கள்