உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 95 வேடிக்கை பார்க்கலாம்; என்னதான் 'பதம் செய்து பாது காத்தாலும் நாளடைவில் தோல் சுருங்கும்; மேனி வதங் கும்; வற்றலாகக் காட்சி அளிக்கும். அதற்குள் வட ஆற்காடு மாவட்டத்திலேயே வேறு ஒரு அதிசயம் கிளப்பும்: 'பூசணிப் பூவில் புல்லாங்குழல் ஊதும் கண்ணன் தெரிகிறான்' என்று ஒரு வதந்தி பரவும்; பிறகு அந்தப் பூசணிக் கொல்லை விழாக் கோலம் காணும்! என்ன செய்வது- இப்படியே பழகி விட்டார்கள் நமது மக்களில் ஒரு பகுதியினர்! உ 'பகுத்தறிவுவாதிகளின் பணி முழுமை பெறவில்லை" என்பதற்கு அடையாளந்தான் இவைகள் எல்லாம்! உடன் பிறப்பே! ஓயாத உன் கட்சிப் பணியில் ஒரு பகுதிதான் பகுத்தறிவுப் பிரச்சாரம் என்பதையும் மறந்து விடாதே! அன்புள்ள, மு.க. 11 - 8 74