உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 177 அரசியல் தெளிவுக்கும் - கொள்கை உறுதிக்கும் -- இலட்சியப் பற்றுக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தன! "உடல் நலிவுற்றிருப்பினும், உள்ளம் திடமாயிருக் கிறது” என்பதை ஒவ்வொரு சொல்லிலும் ஒலித்துக்காட்டி உருக்கமிகு உரையாற்றிய நமது உற்ற துணைவர் என். வி. என்., கடமை-கட்டுப்பாடுபற்றித் தந்த விளக்கங் களை மறந்தி... இயலுமோ? கழகக் காவலராம் நமது நாவலர், செயற்குழு பரிந் துரைத்த உணவு நிலை குறித்த தீர்மானத்தைப் பொதுக்குழு வின் முன் வைத்து ஆற்றிய பேருரையும், கழகத்தின் காள்கை விளக்கக் கூட்டங்கள் குறித்து நமது பொரு ளாளர் பேராசிரியர் நிகழ்த்திய சிறப்புரையும் - செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் வாரி வழங்கிய வலிமைமிகு கருத்துக்களும் குன்றத்துப் பொதுக்குழுவின் மகுடத்து முத்துக்கள்' எனில் பொருந்தும்! 6 சத்தியம் செய்து பத்தியம் ஏற்றிடு றிடுக" என புகழ் நான் விடுத்த வேண்டுகோள்-உன் விஷயத்தில்-விழலுக்கிறைத்த நீராகாது என்றே நம்புகிறேன். சென்னை முப்பெரு விழாவில் உன்னைக்கண்டேன். 'உறுதி தளரவில்லை, நீ' என்பதை உணர்ந்தேன்! குன்றத்திலும், மதுரையிலும் உன்னைக் கண்டேன் உத்வேகம் உன் தோளைக் குலுக்கும் காட்சிதனைக் டேன்! “இப்படை தோற்கின் எப்படைவெல்லும்?" - கண் என அண்ணன் அடிக்கடி கூறுவாரே - அதனையே ஒரு முறை முழங்குகிறேன்-அந்த அண்ணனை நினைத்துக் கொண்டு! ஒரு முறை--வேறு ஓர் அரசியல் நிகழ்ச்சிக்காக-அவர் எழுதினார் - குன்றம் தாழ்ந்தது' என்று குறிப்பிட்டு! இன்று, என் விரல் பிடித்து எழுத வைக்கிறார் 'குன்றம் உயர்ந்தது' என்று! அன்புள்ள மு க. 22-12-74