உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணில் விமானம்! உடன் பிறப்பே, அவன் பெயர் ஜோசப் ஹோமலோவ்; அவன் வயது முப்பது; செக்கோஸ்லோவியா நாட்டுக்காரன்; அவனுக்கு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது; நூற்றுக்கு மேற் பட்ட உயிர்களை ஒரே நேரத்தில் போக்கடிப்பதில் அவனுக்கு ஒரு வறித்தனமான ஆசை! அந்த முயற்சியில், தானும் செத்தாகவேண்டும் என்பது தெரிந்திருந்தும் அதற்கு அவன் தயாராக இருந்தான்! விண்ணில் அமைதியோடு பயணம் செய்து கொண்டி ருத்த அந்த விமானத்தை வீழ்த்தி நொறுக்குவதன் மூலம் அவனது கொடிய இதயத்தின் கோரத் துடிப்புக்கள் அடங் கும்; அவனது மிருக உயிருக்கு ஒரு 'சாந்தி' கிடைக்கும்; அதனால்தான், அவன் அந்த விமானத்தில் ஏறிக்கொண் டான்! து செல்லும் அந்த இந்தியாவிலிருந்து நியூயார்க்குக்குச் விமானத்தில் அவனும் ஒரு பயணியாகவே ஏறிக் கொண் டான். விமானத்தில் அவன் ஏறுவதற்கு முன்பே. சற்று சந்தே கத்துடன்தான் அதிகாரிகள் அவனைச் சோதனையிட்டிருக் கின்றனர்; ஆனால், அவன் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை அவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்! 'சக்கரவர்த்தி ஷாஜஹான்' எனும் சரித்திர நாயகனின் பெயர் தாங்கிய அந்த விமானம் - சரித்திர தாழ்வாரமாம் ம்.