உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 க கலைஞர் பாவம்; அவர்களுடைய ஆசையைத் தீர்ப்பது போல் ரெட்டியார் எந்தப் பதிலும் சொல்லவில்லை. அரசியல் நாகரீகம் தெரிந்தவராதலால் அதற்கேற்ப நிருபர்களுக்கு விடையளித்திருக்கிறார். தமிழக அரசு செய்தித்துறையின் சார்பாக வெளியிடப்பட்ட சாதனைகள் பற்றிய விளம் பரத்தைத் திரு. ரெட்டியார் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்து அவரிடமிருந்து ஒரு பதிலையும் பெற்றிருக் கிறார்கள் நிருபர்கள். அண்மையில் பிரதமர் அறிவித்துள்ள இருபது அம்ச பொருளாதாரத் திட்டங்களில் பலவற்றைத் தமிழக அரசு ஏற்கனவே தொடங்கி நிறைவேற்றி வருகிறது என்பதை விளக்குவதுதான் அந்த விளம்பரம். இப்படிப்பட்ட விளம்பரங்கள் தேவதானா? என்று கேட்பவர்கள் தமிழ்நாட்டில்! உண்டு அவர்களுக்கு வேறு மாநிலங்களின் உதாரணங்களைச் சொன்னால் புரியாது என்பதற்காக. நெருங்கிய நண்பர்களை அவர்கள் பெற்றிருக்கிற கர்னாடகமாநில உதாரணத்தையே சொல்ல விரும்புகிறேன்! 1975 ஏப்ரல் 24-ம் தேதியன்று பல்வேறு மாநில ஆங்கில ஏடுகளில் "Karnataka - Three eventful years" அதாவது: "கர்னாடகத்தில் ஆண்டுகள்" சாதனை சாதனை நிறைந்த மூன்று என்ற பெருந் தலைப்பில் தேவராஜ் அர்ஸ் அவர்களின் படத்துடன், கவர்ச்சிகரமான முழுப்பக்க விளம்பர மொன்று வெளியிடப்பட்டிருந்தது. அதைத்தான் நமது செய்தித்துறையினர் பின்பற்றி அதைப்போன்ற ஒரு விளம் பரத்தை பல்வேறு மாநில ஏடுகளில் வெளியிட்டிருக் கிறார்கள். மூன்றாண்டுக் கால சாதனையை முதலமைச்சரின்