உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்வுகளை உரைக்கின்றேன் உடன்பிறப்பே, மிகச் சிறிய ஊராயிற்றே என்றார்கள். போக்குவரத்து வசதிகளும் குறைவு என்று பயந்தார்கள். வருகின்றவர்கள் தங்குவதற்கும் இடமில்லையே என்று கவலைப்பட்டார்கள். அருகாமையில் கூட எந்த நகரமும் கிடையாதே என்று பருமூச்சு விட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு மாவட்ட மாநாட்டை மாநாட்டை நடத்துவது என்பது சுலபமான காரியமா என்று யாருக்கும் கேட்டிடத்தான் தோன்றும். ஆனால் அச்சத்தையும் ஐயத்கையும் மீறி அனைவரும் வியப் புறத்தக்க வண்ணம் அழகு சிந்தும் மாநாட்டை, ஆர்வம் துள்ளும் மாநாட்டை, அண்ணா ஏற்றி வைத்த விளக்காம் தி.மு.கழகத்தைக் காத்திடும் தீரர்கள் அணிவகுத்த மாநாட்டை அறந்தாங்கியில் நடத்திக் காட்டிவிட்டனர் அயராது செயல்வீரர்களாம் புதிய புதுக்கோட்டை மாவட்டத்துக் கழக கண்மணிகள்! ஒற்றுமை உணர்வும், ஒருவருக்கொருவர் பொதுக் காரியத்துக்கக விட்டுக் கொடுத்துப் பணியாற்றும் பாங்கும், புதுக்கோட்டை மாவட்ட மாநாட்டின் வெற்றிக் சூரிய க ரணங்களில் ஒன்றாகும் சிற்றூர் பேரூர்களில் இருந்து உழவர் பெருங்குடிமக்கள் மாநாட்டுக்கு வந்த காட்சியும், அலை அலையாகக் கழகக் கொடிகள், தோரணங் கள், பதாகைகள் கொண் கொண்டு அணி அணியாய்க் கழகத் தோழர்கள் வந்து கூடிய மாட்சியும் - புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் இருபது கல் தொலைவி இருமருங்கிலும் ஆயிரமாயிரம்பேர் நின்று வாழ்த்திய எழுச்சியும், எத்துணை உற்சாகத்தையும், ஊக்கத்தை உ லும்