உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 129 யும் உருவாக்கின என்று எழுதிடச் சொற்களே கிடையாது என்பேன். பெரியார், அண்ணா போன்ற பெருந் தலைமை களை இழந்துவிட்ட நமது இயக்கத்துக்கு இன்று கிடை திருக்கும் தலைமை அந்தத் தலைமைகளோடு ஒப்பிக் கூடிய அளவுக்குப் பெருமை வாய்ந்ததல்ல. நானறிவேன் ன நானே நன்றாக! ஆமாம் நன்றாக! செய்வது? ஓட்டைச் சட்டியானாலும் கொழுக் கட்டையை எப்படியாவது வேக வைத்தாக வேண்டுமே! அறிவேன் என் கிணற்றில் விழுந்தவன் கைக்குக் கிடைத்த ஒரு கொடியைப் பற்றிக்கொண்டாவது மேலே ஏறிடத்தானே முயன்றிடுவான்! அதுபோலப் பெருந் தலைமைகளை இழந்து சோகத்தில் ஆழ்ந்துவிட்ட இந்தத் தமிழ் இனம், எப்படியோ தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, தன் மரபு, மானம், மொழி, கலை, பண்பாடு, வரலாறு, இலக்கியம் அனைத்தையும் மங்காமல் காப்பாற்ற இந்தக் கழகத்தை நம்பியிருக்கிறது. கழகத்துக்குக் கிடைத்துள்ள தலைமை ஓட்டைச் சட்டியாகக்கூட இருக்கலாம். ‘அதுதானே கிடைத்திருக்கிறது கொழுக்கட்டையை 6 6 வேகவைக்க என்று மனத்தெம்புடன் காரியமாற்றும் கழகச் செம்மல் களின் செயல் வடிவங்களைத்தானே நெல்லையாக, சேலமாக தேனியாக, அறந்தாகியாகக் கண்டு வருகிறோம். மாநாடு நடத்திப் பெரும் நிதியைக் கழகத்திற்கும் மிச்சப்படுத்தியது மட்டுமல்லாமல், இந்தக் கழகத்தையும் நம்மையும் உறுவாக்கிய அண்ணனின் குடும்பத்தை மறந்துவிடாமல் புதுக்கோட்டை மாவட்டச் சார்பில் செயலாளர் நண்பர் பெரியண்ணன் அண்ணா குடும்ப நிதிக்குப் பதினைந்தாயிரம் ரூபாய் கொண்ட பணமுடிப்பையும் வழங்கினார். இதுவரை அண்ணா குடும்பநிதி ஒரு லட்சத்தை எட்டியிருக்கிறது. மற்று மாவட்டங்களில் முயற்சி நடை பெறுவதாக அறிவிக் கப்பட்டுள்ளது. மாவட்டங்களையோ, ஒன்றியங்களையோ, கிளைகளையோ, அல்லது அன்பு உடன் பிறப்பே! உன்னையோ, நான், அண்ணா குடும்ப நிதிபற்றி அடிக்கடி