உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. கடிதம் 161 - ஈரோட்டில் பெரியார் நினைவுச் சின்னம் - பெரியார் பாலம் பெரியார் சிலைகள். பெரியார் பிறந்த வீடு தேசீயச் சின்னம் - பெரியார் மருத்துவமனை -- தந்தை பெரியார் போக்குவரத்துக் கழகம் - பெரியார் கப்பல். மதுரை மாநகராட்சியில் பெரியார் கூடம்-பத்தாம் வகுப்புப் புத்தகத்தில் பெரியார் பாடம் - இப்படி எண் ணற்ற நினைவுச் சின்னங்கள் மட்டுமல்ல; பெரியாரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கு இந்த அரசாங்கம் எவ்வளவு எதிர்ப்பைத் தாங்கிக் கொண்டது என்பதையும் என்னுடைய பழைய நண்பரைப் போன்றவர்கள் அறியாத வர்கள் அல்ல! எழிலார் சோலை நடுவே, அமைதி கொஞ்சும் கல்ல றையில் கடற்கரையில் நமது அண்ணன் துயில்கொள்ளும் இடம்போல வேறொரு இடத்தை நான் சென்று வந்த வெளிநாடுகளிலேகூட கண்டதில்லை. அண்ணா சதுக்கம் - அண்ணாசாலை அண்ணாநகர் அண்ணா அறிவாலயம் மாநகராட்சி அண்ணாமாளிகை அண்ணா மேம் அண்ணாசிலைகள் பாடப்புத்தகங்களில் அண்ணா மதுரை பாலம் - - - 1 - - ING கட்டுரை அண்ணா கல்லூரிகள் - அண்ணா பிறந்தநாள் காவல் துறை பதக்கங்கள் அண்ணா போக்கு வரத்துக் CO விருதுகள் - அண்ணா கப்பல்- கழகம் அண்ணா சர்க்கரை - ஆலை இன்னும் கணக்கிலடங்கா நினைவுச் சின்னங்கள், நமது அண்ணனின் பெயரால்! காந்தியடிகள், மூதறிஞர் ராஜாஜி. கண்ணியமிக்க காயிதேமில்லத், தியாகச்சுடர் காமராசர், பாரதியார், பாரதிதாசன், பசும்பொன்தேவர். சிதம்பரனார், தில்லையாடி வள்ளியம்மை, ஆகிய செம்மல்களுக்கெல்லாம் இந்த அரசு ஆற்றிட வேண்டிய கடமையைக் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஆற்றி வருவதை நடுநிலையோடு சிந்திப்போர் ஏற்றுக்கொண்டு போற்றிடத் தவறவில்லை. சிதம்பரனார் இழுத்த செக்கினைத் தேடிக் கண்டுபிடித்து சென்னையில் காட்சிப் பொருளாக்கியிருப்பது இந்த அரசுதானே!