உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கலைஞர் மற்ற மாநிலங்களின் நலன்களைப் புறக்கணித்துவிட்டு, நமக்கே எல்லாம் செய்திட வேண்டுமென்ற தன்னலம் தலை தூக்கியதில்லை நம்மிடையே! MAIZED வளர்ச்சித் திட்டங்களை வரிசையாக நிறைவேற்றத் தான் நேரமும் நினைப்பும் இல்லை- திருவாளர் சுப்பிரமணி யத்துக்கு என்றால், வறட்சியால் தமிழகம் வாடும் போதாவது கருணைக் கண்கொண்டு - நன்றி உணர்வோடு அரசியல் மாறுபாட்டுக்கு அப்பாற்பட்டு - மக்களின் வேதனையைத் தீர்க்கும் மனப்பக்குவத்தை அவர் பெ பற்று இருக்கக் கூடாதா? நம்மைக் கடுமையாக எதிர்க்கின்ற காமராசர்கூட 'வறட்சிப் பிரச்சினையிலே அரசியலைக் கலக்கக்கூட து. என்று நீண்ட நாட்களாகக் கூறி வருகிறார்! - - 0. ஆனால், மிகப் பொறுப்பான நிதித்துறையின் அமைச்சர் பருமகனார், மாநில அரசுகளை - அடிமைகளைவிடக் கீழான அளவில் மதிப்பிடு செய்துகொண்டு - அதிலும் குறிப்பாகத் தமிழ் மாநில அரசு குறித்துத் தனது மனக்காழ்ப்பை வெளிப்படுத்தியிருப்பது அவர் 'எல்லாவற்றையும் அரசிய லாக்கி அதில் இலாபம் தேடப்பார்க்கிறார்' என்பதையே காட்டுகிறது! சென்னை தியாகராய நகரில் அவர் ஆற்றிய உரையை அனைத்திந்தியாவிலும் யாரும் 'சரி' என்று ஏற்றுக் கொள்ள வில்லை! அவரது கட்சியினரேகூட, அவருக்கு நேராக ஒப்புக்காகத் தலையசைத்துவிட்டு தலையசைத்துவிட்டு 'உள்ளுக்குள் நொந்து கொள்கிறார்கள்' என்பதுதான் உண்மை! வறட்சி நிதிமட்டுமல்ல-எந்த நிதியாயினும்,நாம், கணக்குக்காட்ட மறுத்திடவில்லை; அதிலே நமது உரிமை களைக்கூட வலியுறுத்திட விரும்பவில்லை; ஆனால் எதற்கும் ஒரு வழிமுறை இருக்கிறது; அந்த முறையை அலட்சியப் படுத்திவிட்டு, தமிழகத்துக் கழக அரசின்மீது களங்கம் பூசிடும் தோரணையில் அவர், தமது மேடைப் பேச்சை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/52&oldid=1695078" இலிருந்து மீள்விக்கப்பட்டது