உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் அமைத்துக் காண்டதுதான் விட்டது! கண்டிக்கத்தக்க 43 ஒன்றாகி 'ரொம்பக் கோபித்துக் கொண்டு விட்டாயாமே! வரவேண்டிய வறட்சி நிதி வராவிட்டால் என்ன செய்வது?' என்று உனக்குக்கூடக் கேட்கத் தோன்றும்; நான் அதற் கான விளக்கங்களை சட்டப்பேரவையில் அளித்திருக்கிறேன்; படித்திருப்பாய் என்று நம்புகிறேன். . 1969-லும், 1972-லும் மத்திய அரசு அளித்த வறட்சி - வெள்ள நிவாரண நிதிகளில், முக்கால் பங்குக்கு ஒப்ப,கடனாக நாம் அவர்களுக்குத் திருப்பித் தருகிறோம்; அதிலும், இப்போது தந்துள்ள சுமார் ஆறு கோடி யானாலும் -- இனிமேல் மத்திய அரசு வறட்சிக்காக ஏதாவது நிதி தருவதாக இருந்தாலும் - அதனை நமது திட்டத்துக்காக மத்திய அரசு கடனாகவும் - மானிய மாகவும் வழங்குகிற தொகையில் கழித்துக் கொள்வார் களாம். பிறகு, 1976-77-ம் ஆண்டுத் திட்டத்துக்குத் திண்டாட வேண்டியதுதான்! நிலையில்தான் அமைச்சர் பெருமகனார், நம்மீது மாசு தூவும் கருத்தைப் பொதுக்கூட்டத்தில் வெளியிட் டிருக்கிறார் எவ்வளவு வேதனையான போக்கு இது! மத்திய அமைச்சர் அவர். மாநில அமைச்சர்களுடன் விவாதித்திருக்கலாம்; மாநில அதிகாரிகளுடன் பேசி யிருக்கலாம்; பொதுக்கூட்டத்துக்கு முன்பு எங்களோடு பேச அவருக்கு நிறையப் பொழுது இருந்தது! பொல்லாங்கு கூறவேண்டுமென்று திட்டமிட்டு வந்த சந்திக்கவோ வருக்கு, எங்களைச் பேசவோ நினைவு எப்படி வரும்? - அல்லது அழைத்துப் எப்படியோ - நமது தன்மான உணர்வுக்கு அறைகூவல் விடுத்துவிட்டார்: நாலரைக் கோடித் தமிழர்கள் சார்பில் நானும் அதனை ஏற்றுக்கொண்டுவிட்டேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/53&oldid=1695079" இலிருந்து மீள்விக்கப்பட்டது