உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு தூண்கள் சாய்ந்தன! உடன்பிறப்பே, மகிழ்ச்சியைத் தொடர்ச்சியாக சில மணி நேரங்கள் அனுபவிப்பது என்பது நம் வாழ்க்கையில் இல்லாமலே போய் விட்டது. தஞ்சை மாவட்ட சுற்றுப் பயணத்தை மிக்க உற்சாகத்துடன் நடத்தி முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பினேன். வீட்டுக்குள் நுழைவதற்குள்ளாகவே நமது நண்பர் முனுசாமி மறைந்து விட்டார் என்ற செய்தி நெஞ்சைப் பிளந்தது. அடுத்து இருநாட்களுக்குள் வட ஆற்காடு மாவட்டத்தில் எழுச்சிமிகு சுற்றுப் பயணத்தை மூடித்துவிட்டு, அதுபற்றி நண்பர்களுடன் பேசி மகிழ்வ தற்குள்ளாகவே இதயத்தில் இன்னொரு வேல் பாய்கிறது. துன்பங்கள் துணையோடுதான் வருமாம். அதே போல் மற்றொரு கணையும் உள்ளத்தைத் துளைத்துவிட்டது இன்று! கழகத்தின் சென்னை மாவட்டத் தூண்களிலே ஒருவரான நண்பர் கண்ணபிரானையும் இயற்கை கொள்ளைகொண்டு விட்டது. நாலைந்து நாட்களுக்குள் நம்மைத் தாக்கியுள்ள இந்தப் பேரிடிகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ப முனுசாமி, சென்னை நகரில் கழகம் வளர் ஆரம்ப காலத்தில் ஏற்றுக்கொண்ட இன்னல்கள் கொஞ்சமல்ல. அவரது அனுபவம், ஆற்றல், நிர்வாகத் திறமை அனைவ ராலும் பாராட்டப் பட்டதாகும். நீண்ட பல ஆண்டுகள் மாநகராட்சி உறுப்பினராகவும், பின்னர் மேயராகவும் பொறுப்பேற்றுத் தன் உழைப்பின் வாயிலாக அரும் பெருங் காரியங்கள் பலவற்றைச் செய்தார். அண்ணாவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/60&oldid=1695086" இலிருந்து மீள்விக்கப்பட்டது