உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் அன்புக்குப் பாத்திரமானவர். 51 பாத்திரமானவர். நமக்கெல்லாம் பழகுதற் கினிய பக்குவம் படைத்தவர். மாநகராட்சி மன்றத்தில் தவறுகள் . கண்டு பிடிக்கப் பட்டு. அதனையே நமது அரசு, கலைத்தபோதும், முனுசாமி அவர்களின் மீதே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், அதுபற்றிய வழக்கில் அவரை நீதி மன்றத்தில் நிறுத்தியபோதும் ANGLOED 66 "கழக அரசு சட்டப்படி தன் கடமையைச் செய் கிறது. இந்த விவகாரத்தில் என் நிலையை விளக்க நான் தயாராக இருக்கிறேன். அதற்காகக் கழக அரசின்மீது குறைகூற மாட்டேன். அதுவே நான் கடைப்பிடிக்கும் கட்டுப்பாட்டு உணர்வு' என் 9 .. று அவர் நண்பர்களிடத்திலே சொல்லிக் கொண் டிருந்த ரே தவிர. கழக அரசின் மீது கோபப்பார்வையை வீசிடவில்லை. அத்தகைய உளப்பாங்கு பெற்றவர், எல்லே ருக்கும் உதவிடும் நெஞ்சு படைத்தவர் நண்பர் முனுசாமி. கண்ணபிரான், நமது வேழவேந்தனின் மாமனார். ஆனால் இந்த உறவுக்கு முன்பே கண்ணபிரான், கழகப் பணிகளுக்காகப் பம்பரமெனச் சுழலும் தொண்டர்! சென்னை மாவட்டத்தின் செயலாளராக இருந்து அவர் பணியை மறக்க முடியுமா? வேழவேந்தனின் ஆற்றிய துணைவி - அப்போது - இளஞ்சிறுமி! கழக மேடைகளில் அந்தச் சிறுமியின் கொள்கைப் பாட்டுக்கள்! பாட்டுக்கள்! நடனங்கள்! அதனை ரசித்து மகிழும் நமது அண்ணா! அந்த அண்ணனின் மகிழ்ச்சியைக் கண்டு மகிழும் கண்ணபிரான். அந்தோ! அந்த நினைவுகள் நெஞ்சை நெருப்பாக்குகின்றனவே! மேயர் பதவி வேண்டுமென்று கேட்டார். அப்போது தர இயலவில்லை. வேறொருவருக்கு தருவதற்கு கழக ஆட்சி மன்றக் குழுவும் மாநக ராட்சி உறுப்பினர்களும் முடிவெடுத்தனர். அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/61&oldid=1695088" இலிருந்து மீள்விக்கப்பட்டது