உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கலைஞர் கூடாது என்று திட்டம்போட்டுக்கொண்டு காமராஜரும் பெரியாரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டிருந்தால், சுமார் பத்து ஆண்டுக்காலம் காமராஜருடைய ஆட்சியைப் பெரியார் ஆதரிக்கிற நிலைமை உருவாகியிருக்காது! அதைப்போலவே 1971 ஆம் ஆண்டு ராஜாஜியும் காமராஜ ரும் ஒரு ரு அணியில் நின்றிருக்க முடியாது! அண்ணா மறைந்தபோது காமராஜர் கண்ணீர் வடித்ததும் காமராஜர் மறைந்தபோது நாம் கதறித் துடித்ததும் நீண்டகாலமாக கட்டிக் காக்கப்பட்டு வருகிற அரசியல் நாகரீகத்தின் அடிப்படையிலும் அன்பான நட்புணர்வின் களங்கமற்ற பின்னணியிலுமேதான்! அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டு, பின்னர் அந்தப்பதவியை நிலைப்படுத்த முறைப்படி இடைத் தேர்தலில் போட்டியிட அவர் குடியேற்றம் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார். அவரை எதிர்த்துக் கம்யூனிஸ்டுக் கட்சி வேட்பாளர் போட்டியிட்டார். அப்போது நமது கழகத்தின் ஆதரவு காமராஜருக்கே வழங்கப்பட்டது! குணாளர்! குலக் கொழுந்து! எனத் தலைப்பிட்டு அண்ணா அவர்கள், அன்று "திராவிட நாடு" இதழில் எழுதிய கருத்துக்கள் குடியேற்றம் தொகுதியில் காமராஜருக்கு வெற்றி கிட்டவேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்கள், இன்றைக்கும் மறந்துவிடக் கூடியவைகள் அல்ல! அரசியலில் பகையும், நட்பும் மாறி மாறி வரும்! ஆனால் பண்புகள் நிலையாக இருந்திட வேண்டும்! இதனை மறவாமல் கடைப்பிடித்த தலைவர்களில் ஒருவர் தான் மறைந்த தியாகச்சுடர் காமராஜர் அவர்க ளாவார்கள். - மக்களின் அவர் இந்த மண்ணின் விடுதலைக்காக உரிமைக்குரலுக்காக - அடிமைத்தனத்தை ஆணிவேருடன் -