உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் - பல்லாண்டுகள் வீழ்த்துவதற்காக சிறையில் வாடியிருக்கிறார். 119 பலமுறைகள், ஒரு மனிதனின் துன்பம் என்பது வேறு! பல லட்சம் மக்களுக்காக ஒரு மனிதன் துன்பத்தை ஏற்றுக்கொள்வது என்பது வேறு. இதில் இரண்டாவது வகைத் துன்பத்தை ஏற்றுக்கொண்டவர்தான் தியாகச்சுடர் காமராஜர்! இந்திய அரசியல்வானில் ஞாயிற்றின் நல்லொளியைப் பரப்பியவர்! தமிழகத்து மக்களின் இதய மலரில் நறுமணமாகத் திகழ்பவர்! ஜனநாயக முறையில் சோஷலிசம் கனிந்திட வேண்டு மெனக் காலமெலாம் பாடுபட்டவர். அவருக்கு அஞ்சல் தலை வெளியிடுவது நமது கடமை! நமக்குப் பெருமை! நமது நன்றி காட்டும் தன்மைக்குச் சான்று! வாழ்க காமராஜர் புகழ்! அன்புள்ள மு. க. 24-6-76