உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் - 165 ஒன்றுரைக்க மறந்துவிடப் போகிறேன் அதாவது; இன்று எழுதியுள்ள மடல், விசாரணைக் கமிஷன் நிதியளித் தமைக்கு நன்றி தெரிவித்து அதனை நிறைவு செய்துவிட்ட மடல் என்று கருதிவிடாதே! பட்டியலில் உன் ஊர்ப் பெயர் இருக்கிறதா; என்று கவனமாகப் பார்! அதற்கு உனக்கு வசதியாக இருக்க எழுதப்பட்டதே, இந்த மடல்! பேருந்துகளின் பட்டியலிலோ, அல்லது முரசொலியில் நாள்தோறும் வெளிவரும் பட்டியலிலோ உன் பெயரோ, அல்லது உன் ஊர்ப் பெயரோ இல்லாவிட்டால், உடனடி யாக அந்தக் குறையை அகற்றிட முயற்சிகளை மேற் கொண்டிடுக! . க=7A-11 அன்புள்ள மு. க. 7-7-76