உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வை நோக்கி நடைபோட... ! உடன்பிறப்பே, சீட்டுக்கம்பெனி நிர்வாக இயக்குநர் ஒருவர் வீட்டில் சோதனை நடைபெற்று ஐம்பது லட்ச ரூபாய் கறுப்புப் பணம் கைப்பற்றப் பட்டிருப்பதாக ஏடுகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. யார் அந்த உரிமையாளர் என்று பெயர் எதுவும் வெளியிடப்படவில்லை. அப்படியிருந் துங்கூட ஒருசில ஏடுகளுக்கு வழக்கமான "வக் கணை"யும் மாறவில்லை. "வக்கிர புத்தி"யும் போக வில்லை. "அந்த சீட்டுக் கம்பெனி தி. மு. க. புள்ளி களுக்குத் தொடர்புடையது" என்று நடிகர் கட்சியின் அதிகாரபூர்வமான ஏடொன்று தலைப்பு கட்டிவிட்டு, உள்ளே எந்த விபரத்தையும் வெளியிடாமல் தனது நெறி"யைக் காட்டிக் கொண்டிருக்கிறது. 6 6 அதைப்போலத்தான் வார்னீஷ் குடித்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பிணங்களாகச் சாயும் கோரக் காட்சி யைக் கண்டு அதற்காகக் கண்ணீர் வடிக்காமல் ஆகா! இதற்கும் கருணாநிதிக்கும் சம்பந்தம் உண்டு" அது என்று சில ஏடுகள் கதைகட்டியிருக்கின்றன. 63 . மட்டுமல்ல, மாநிலத் தலைமைக் காவல்துறை அதிகாரி ஸ்ட்ரேசி அவர்கள் இந்த "வார்னீஷ் சாவுகளை யொட்டி விடுத்த அறிக்கையொன்றையும் மாற்றுக்கட்சி ஏடுகள் திரித்து வெளியிட்டு, அவர் கடந்த காலம் என்று பொதுவாகக் குறிப்பிட்டதை "கழக அரசின் காலம்' என்று அவர் குறிப்பிட்ட தாகக் செய்து களியாட்டம் போட்டிருக்கின்றன. G கற்பனை