உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 123 வர்கள் அல்லவா? தாயன்பைப் பொழிந்தவர்கள் அல்லவா? மாறி மாறி வரும் சுக, துக்க நிகழ்ச்சிகளால் , நான் பிணைக்கப்பட்டபோது என்னுடன் இணைந்திருந்து என் இலட்சியப் பயணத்திற்குத் துணை நின்றவர்கள் அல்லவா? - பேராவூரணி, நாடியம், சேதுபாவாசத்திரம் கழகக் கண்மணிகளை நேற்றும் முன்தினமும் நான் கண்ட போது எத்தனை எத்தனை சிந்தனைச் சுழல்கள் என் இதயத்தில் ஏற்பட்டன தெரியுமா? இன்று பேராவூரணியில் நடமாடவும் இயலாமல் நரை திரை மூப்பால் அவதியுறும் பெருங் கிழவர் ஒருவர்! அவர் பெயர் குழந்தை! சுயமரியாதைச் சிங்கம்! அவர் மகன் பெயர் மாஸ்கோ! அந்தக் காலத்தில் சிறுவனான என்னைத் தூக்கி ஒரு கூண்டு வண்டியில் உட்கார வைத்துக்கொண்டு, அவர் வண்டிக்குப் பின்னாலேயே நடந்து வந்து நடந்து வரும்போதே - சுயமரியாதைப் பாடல்களை ஒலித்துக் கொண்டு - ஊர் ஊருக்கும் மேடை யமைத்து என்னைப் பேசிடச் சொல்வார். - வர அவரைப் போலவே மற்றொரு அடலேறு - அடைக் கலம் என்பார்! என்னுடன் பலமுறை சிறையிலே இருந்தவர். அவர் உடல் நலிவின் காரணமாக இயலவில்லை என்று அவர் மகன் வந்திருந்தான் நேற்று! அந்த அடைக்கலம் தான் ஆறுகளையும் ஓடைகளையும் கடப்பதற்கு என்னைத் தோளிலேயே தூக்கிக் கொண்டு போய்க் கிராமக் கூட்டங்களில் பேச வைப்பார்! திருவாரூர் ரங்கராஜு அண்ணன் என்ன, சிங்கராயர் என்ன, டி. என். ராமன், லட்சப்பா எனும் அண்ணன் மார்கள் என்ன, குடியரசு இதழை சட்டைக்குள்ளேயே மறைத்துக் கொண்டுபோய் திண்ணைக்குத் அமர்ந்து படித்துக் காட்டும் ராமாமிர்தம் திண்ணை என்பார்